sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 24, 2026 ,சித்திரை 11, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பிளஸ் 2 தேர்வு எழுதியோருக்கு வல்லுனர்கள் வழிகாட்டும் தினமலர் வழிகாட்டி - 26

/

பிளஸ் 2 தேர்வு எழுதியோருக்கு வல்லுனர்கள் வழிகாட்டும் தினமலர் வழிகாட்டி - 26

பிளஸ் 2 தேர்வு எழுதியோருக்கு வல்லுனர்கள் வழிகாட்டும் தினமலர் வழிகாட்டி - 26

பிளஸ் 2 தேர்வு எழுதியோருக்கு வல்லுனர்கள் வழிகாட்டும் தினமலர் வழிகாட்டி - 26


UPDATED : மார் 27, 2026 03:12 PM

ADDED : மார் 27, 2026 03:15 PM

Google News

UPDATED : மார் 27, 2026 03:12 PM ADDED : மார் 27, 2026 03:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
பிளஸ் 2 தேர்வெழுதி, தேர்வு முடிவுக்காகவும், எதிர்கால படிப்புக்காகவும் காத்திருக்கும் மாணவர்களுக்கு, துறை சார்ந்த வல்லுனர்களின் வாயிலாக வழிகாட்டும், 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி, மார்ச் 28ம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உள்ள, 'கன்வென்ஷன் சென்டரில்' துவங்க உள்ளது.

'தினமலர்' நாளிதழ் சார்பில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, கல்வி, வேலைவாய்ப்பு சார்ந்த ஆலோசனைகள் வழங்கும் 'வழிகாட்டி' நிகழ்ச்சி, ஆண்டுதோறும் நடக்கிறது.

இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி, நாளை மற்றும் நாளை மறுநாள், காலை 10:00 முதல் மாலை 06:30 மணி வரை, சென்னையில் நடக்க உள்ளது. இதில், 20க்கும் மேற்பட்ட துறைகளின் நிபுணர்கள், கல்வியாளர்கள் பங்கேற்று, மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.

முக்கியமாக ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம், அது சார்ந்த படிப்புகள், ஐ.டி., துறை சார்ந்த வேலை வாய்ப்புகள், நீட், ஜே.இ.இ., உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்குவர்.

மேலும், உயர்கல்விக்கான உதவித்தொகை, கல்விக்கடன் பெறும் நடைமுறைகள் குறித்தும், சம்பந்தப்பட்ட துறையை சேர்ந்தவர்கள் விளக்குவர்.

நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர், தாங்கள் விரும்பும் கல்லுாரி, படிப்புகள் குறித்து நேரடியாக விசாரித்து அறிந்து கொள்ளும் வகையில், நிகழ்விடத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளின் அரங்குகள் இடம் பெறும்.

அங்கு சென்று, அங்குள்ள படிப்புகள், சேர்க்கை நெறிமுறைகள், கல்விக் கட்டணம், உதவித்தொகை உள்ளிட்ட விபரங்களை, நேரடியாக விசாரித்து அறியலாம்.

ஏ.ஐ., ரோபோடிக்ஸ், ஏ.ஆர்., வி.ஆர்., உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப கண்காட்சியும் இடம்பெறும். இதில் பங்கேற்கும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், 'லேப்டாப், டேப், ஸ்மார்ட் வாட்ச்' ஆகிய பரிசுகளும் வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சியை, 'தினமலர்' நாளிதழுடன் இணைந்து, ஸ்ரீ கிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன், ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனம், அம்ரிதா விஸ்வவித்யாலயா ஆகியவை நடத்துகின்றன.

உயர்கல்வி மற்றும் எதிர்கால தொழில் வாய்ப்புகள் குறித்து, தெளிவான வழிகாட்டுதலைப் பெற விரும்பும் மாணவர்கள், பெற்றோர், நாளைய நிகழ்ச்சியில் பங்கேற்று பயன் பெறலாம்.



தொழிற்கல்வி - பெங்களூரு, இந்திய அறிவியல் நிறுவன பேராசிரியர் டி.ஜி.சீதாராமன்.

நீங்களும் விஞ்ஞானி ஆகலாம் - மத்திய பாதுகாப்புத்துறை விஞ்ஞானி வி.டில்லிபாபு.

உலகை ஆளும் தொழில்நுட்பங்கள் - சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் பலராமன் ரவீந்திரன்.

நீங்களும் ஐ.ஏ.எஸ்., ஆகலாம் - ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி சைலேந்திரபாபு.

நிறுவனங்கள் விரும்பும் திறன்கள் - மஹிந்த்ரா அண்டு மஹிந்த்ரா தொழில்நுட்ப வல்லுநர் சங்கர் வேணுகோபால்.

புதிய கல்வி வாய்ப்புகள் - கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி.

21ம் நுாற்றாண்டு திறன்கள் - நாஸ்காம் இயக்குநர் உதயசங்கர்.

ட்ரோன் தொழில்நுட்பம் - சென்னை எம்.ஐ.டி., பேராசிரியர் செந்தில்குமார்.

நீட், ஜெ.இ.இ., தேர்வுகளில் சாதிக்க - கல்வி ஆலோசகர் அஸ்வின்.

மதிப்பெண்களா? திறன்களா? - ஜோஹோ தொழில்நுட்ப இயக்குநர் ராஜேந்திரன் தண்டபாணி.







      Dinamalar
      Follow us