குரூப் 2 - ஏ நேர்முகத்தேர்வு அல்லாத பணியிடங்களில் சேர...
குரூப் 2 - ஏ நேர்முகத்தேர்வு அல்லாத பணியிடங்களில் சேர...
UPDATED : டிச 29, 2014 12:00 AM
ADDED : டிச 29, 2014 06:10 PM
சென்னை: சமீபத்தில் வெளியிடப்பட்ட குரூப் 2 - ஏ நிலை பணிகளுக்கான போட்டித் தேர்வு முடிவுகளையடுத்து, அத்தகுதி நிலையில், நேர்முகத் தேர்வு அல்லாத பணியிடங்களுக்கான ரேங்க் நிலவரம், கவுன்சிலிங் விபரங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள காலியிட விபரங்கள் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளன.
உதவியாளர்(assistant), கணக்காளர்(accountant), எல்.டி.சி.கிளர்க்(LDC clerk) மற்றும் பர்சனல் கிளர்க்(personal clerk) ஆகிய பதவிகள், நேர்முகத் தேர்வு அல்லாமல், எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் அடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட உள்ளன.
எனவே, தேர்வில் தேர்ச்சி பெற்றோர், தங்களின் ரேங்க் விபரம், தங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் விபரம் மற்றும் துறைரீதியான காலியிட விபரங்களை அறிய www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளம் செல்க.
