தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 மாணவர்கள் நாளை முதல் விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 மாணவர்கள் நாளை முதல் விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 மாணவர்கள் நாளை முதல் விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யலாம்


UPDATED : மே 27, 2024 12:00 AM

ADDED : மே 27, 2024 05:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 27, 2024 12:00 AM ADDED : மே 27, 2024 05:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களுடைய விடைத்தாள் நகல்களை நாளை பிற்பகல் 2 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்தி குறிப்பு:

மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை பிற்பகல் 2 மணி முதல் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல்-II/மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Application for Retotalling / Revaluation என்ற பக்கத்தை கிளிக் செய்து விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதனை பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து உரிய கட்டணத்துடன் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் மே 29 (புதன்கிழமை) பிற்பகல் 1 மணி முதல் ஜூன் 1 (சனிக்கிழமை) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

கட்டண விவரம்:

மறுமதிப்பீடு: பாடம் ஒவ்வொன்றிற்கும் ரூ.505
மறுகூட்டல்-II
உயிரியல்-ரூ.305
மற்ற பாடங்கள் ஒவ்வொன்றிற்கும்- ரூ.205
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us