தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/“சந்திரயான்-2’ திட்டத்தில் ரஷ்யா பங்களிப்பு அதிகமாக இருக்கும்’

“சந்திரயான்-2’ திட்டத்தில் ரஷ்யா பங்களிப்பு அதிகமாக இருக்கும்’

“சந்திரயான்-2’ திட்டத்தில் ரஷ்யா பங்களிப்பு அதிகமாக இருக்கும்’


UPDATED : நவ 18, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


கோவை:
“இந்தியாவின் ‘சந்திரயான் - 2’ திட்டத்தில் ரஷ்யாவின் பங்களிப்பு அதிகமாக இருக்கும்,” என, திட்ட இயக்குனர் அண்ணாதுரை தெரிவித்தார்.
‘சந்திரயான்-1’ திட்ட இயக்குனர் அண்ணாதுரை, கோவையில் நவ. 17ம் தேதி நிருபர்களிடம் கூறியதாவது:
‘சந்திரயான்-2’ திட்ட அறிக்கை  தயாராக உள்ளது. இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. வரும் 2011-2012ம் ஆண்டு மே மாதத்தில், ‘சந்திரயான் -2’ விண்ணுக்கு செல்லும். இத்திட்டத்தில் ரஷ்யாவின் பங்களிப்பு அதிகமாகவும், மற்ற நாடுகளின் பங்களிப்பு குறைவாகவும் இருக்கும்.
‘சந்திரயான்-1’ மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதில் பொருத்தப்பட்டுள்ள கேமரா, விரைவாக அதிக படங்களை எடுத்துத் தருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த விண்கலம், நிலவில் நீர் ஆதாரம், தாதுக்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்யும். இவ்வாறு அண்ணாதுரை கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us