தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2வின் முக்கியத்துவம் என்ன? பல்கலை துணைவேந்தர் ‘பளிச்’

பிளஸ் 2வின் முக்கியத்துவம் என்ன? பல்கலை துணைவேந்தர் ‘பளிச்’

பிளஸ் 2வின் முக்கியத்துவம் என்ன? பல்கலை துணைவேந்தர் ‘பளிச்’


UPDATED : நவ 21, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பிரத்யேக, ‘ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சி, சென்னைப் பல்கலைக் கழகத்தில் நவ. 20ம் தேதி நடந்தது.
நிகழ்ச்சியில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ராமச்சந்திரன் பேசியதாவது:
‘ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சியை உங்களுக்காக, ‘தினமலர்’ நடத்துகிறது. ‘தினமலர்’ நாளிதழுக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டும். நீங்கள் இப்போது ஒரு முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறீர்கள். இதற்கு பிறகு உயர்கல்வி, கல்லூரிக்கு செல்லப்போகிறீர்கள். நாட்டில் 20 கோடி மாணவர்கள், பள்ளிக்குள் முதல் வகுப்பில் நுழைகின்றனர். பிளஸ் 2 விற்கு 10 கோடி பேர் மட்டுமே வருகின்றனர். மீதமுள்ள 10 கோடி பேர் படிப்பை பாதியில் கைவிடுகின்றனர்.
பாதியில் கைவிடாத 10 கோடி பேரில் நீங்களும் இருப்பதை நினைத்து சந்தோஷப்பட வேண்டும். இந்த 10 கோடி பேரில் ஒரு கோடி பேர் மட்டுமே கல்லூரிக்கு செல்கின்றனர். மீதமுள்ள ஒன்பது கோடி பேர் பிளஸ் 2வுடன் படிப்பை நிறுத்திவிடுகின்றனர். இதற்கு பலவகையான காரணங்கள் இருக்கின்றன.
நீங்கள் அனைவரும் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என வாழ்த்துகிறோம். அதற்கு நீங்கள் முக்கியமாக செய்ய வேண்டியது நன்றாக படிக்க வேண்டும். நல்ல மதிப்பெண் பெற்றால் தான் பொறியியல், மருத்துவம், அறிவியல், கலை ஆகிய கல்லூரியில் இடம் கிடைக்கும்.
சென்னைப் பல்கலைக்கழக பயோடெக்னாலஜி துறையில் சேர 2,000 விண்ணப்பங்கள் வருகின்றன. ஆனால், 20 மாணவர்களுக்கு மட்டுமே இடம் வழங்க முடியும். இப்படிப்பிற்கு விண்ணப்பிப்பவர்களில் 1 சதவீதம் பேருக்கு மட்டுமே இடம் வழங்க முடிகிறது. இந்த 20 மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் தான் இடம் வழங்கப்படுகிறது. நன்றாக படித்து, நல்ல மதிப்பெண் பெற்றால் தான் விரும்பிய படிப்பைப் படிக்க முடியும்.
அடுத்த நான்கு மாதம், மிகவும் முக்கியமான காலம். இந்த காலத்தை நீங்கள் உபயோகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எது போனாலும் கிடைக்கும். ஆனால், நேரம் போனால் மீண்டும் கிடைக்காது; போனால் போனது தான். எனவே, நேர மேலாண்மை மிகவும் அவசியம். அடுத்த நான்கு மாதத்தில் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
எதை எதை எப்படி படிக்க வேண்டும் என தீர்மானித்துக் கொள்ளுங்கள். கற்றலில் கேட்டல் நன்று என்பர். நீங்களாக படிப்பதை விட, ‘குரூப் டிஸ்கஷன்’ என நண்பர்களுடன் சேர்ந்து படியுங்கள். பெற்றோர் உதவினால், அதையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். கடின உழைப்பு தான் வெற்றிக்கு மிகவும் அவசியமான ஒன்று. கடின உழைப்பும், முயற்சியும் இருந்தால் தான் வெற்றி பெற முடியும்.
பட்டாம்பூச்சி, பட்டாம்பூச்சியாக ஆவதற்கு முன் கூட்டுப்புழுவாக இருந்தது. அந்தப் புழு, அழகான வண்ணத்துப்பூச்சி ஆகும் என யாரும் நினைத்தது கிடையாது. ஆனால், அதே கூட்டுப்புழு தான் அழகிய வண்ணத்துப்பூச்சியாக மாறியது.
அதேபோல, நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள், எப்படி இருந்தீர்கள் என்பது முக்கியமல்ல; நீங்கள் எப்படி ஆகப் போகிறீர்கள் என்பது தான் முக்கியம். அதற்கு அவசியம் உங்களது முயற்சி, உழைப்பு. இவ்வாறு ராமச்சந்திரன் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us