தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 விடைத்தாள் திருத்திய ஆசிரியர்களிடம் மீண்டும் விசாரணை

பிளஸ் 2 விடைத்தாள் திருத்திய ஆசிரியர்களிடம் மீண்டும் விசாரணை

பிளஸ் 2 விடைத்தாள் திருத்திய ஆசிரியர்களிடம் மீண்டும் விசாரணை


UPDATED : டிச 31, 2009 12:00 AM

ADDED : டிச 31, 2009 12:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 31, 2009 12:00 AM ADDED : டிச 31, 2009 12:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: கடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில், விடைத்தாள்களை சரிவர திருத்தாத ஆசிரியர்கள் மீது மீண்டும் விசாரணை துவங்கியுள்ளது.


இயற்பியல், கணிதம் பாடங்களை திருத்திய ஆசிரியர்கள் நேற்று சென்னை வரவழைக்கப்பட்டு, அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள்களை, ஆசிரியர்கள் சரிவர திருத்தவில்லை என்பது, தேர்வு முடிவு வெளியானதும் தெரிய வந்தது. பத்தாம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்ததில், அதிகமான மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அதிகரித்தது.


பிளஸ் 2 தேர்வில் ஒரு மாணவர், மறு மதிப்பீடு திட்டத்தில் விண்ணப்பித்து, அதிக மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் முக்கிய இடம் பிடித்தார். இதேபோல், பல மாணவர்களுக்கு கூடுதலாக மதிப்பெண்கள் கிடைத்தது. இதனால், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்திய ஆசிரியர்களை ஏற்கனவே சென்னைக்கு அழைத்து, தேர்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.


அவர்களிடம் விளக்கக் கடிதம் பெற்றுக்கொண்டு, அனுப்பப்பட்டனர். இந்நிலையில், பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்திய ஆசிரியர்கள் மீது மீண்டும் விசாரணை துவங்கியுள்ளது. தற்போது அரையாண்டுத் தேர்வு விடுமுறை அமலில் உள்ள நிலையில், சில தினங்களுக்கு முன் திடீரென, சென்னைக்கு வருமாறு, ‘இ-மெயில்’ மூலம், ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின், போன் மூலமாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.


இயற்பியல், கணிதப் பாட விடைத்தாள்களை திருத்திய ஆசிரியர்கள் நேற்று சென்னை வந்தனர். டி.பி.ஐ., வளாகத்தில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மாதிரி விடைத்தாள்களை காண்பித்து, விடைத்தாளை திருத்தும் முறை குறித்து, அவர்களிடம் விளக்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, பாட வாரியாக ஆசிரியர்களை அழைத்து விசாரணை நடைபெற உள்ளது.


இது குறித்து, சில ஆசிரியர்கள் கூறியதாவது:
ஏற்கனவே ஒரு முறை விசாரணை நடத்தி, விளக்கக் கடிதமும் பெற்றுக் கொண்டனர். அடுத்த தேர்வே வந்துவிட்டது. இந்நிலையில், திடீரென மீண்டும் விசாரணை என்று அழைப்பது, அதிர்ச்சி அளிக்கிறது. ஒரு சில ஆசிரியர்கள், மதிப்பெண்களை மிகவும் குறைவாக போட்டு விடுகின்றனர். அவர்களால், ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கும் பிரச்னையாக இருக்கிறது. இப்படி எங்களை அடிக்கடி சென்னைக்கு அழைப்பதால், விடைத்தாளை திருத்தியதற்கு கொடுத்த தொகையை விட, அதிகமாக செலவழிக்க வேண்டியுள்ளது. அத்துடன், அதிக மன உளைச்சலும் ஏற்படுகிறது. இவ்வாறு, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us