தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மகரிஷி தயானந்த் பல்கலைக்கு யு.ஜி.சி., கடும் கண்டிப்பு

மகரிஷி தயானந்த் பல்கலைக்கு யு.ஜி.சி., கடும் கண்டிப்பு

மகரிஷி தயானந்த் பல்கலைக்கு யு.ஜி.சி., கடும் கண்டிப்பு


UPDATED : டிச 31, 2009 12:00 AM

ADDED : டிச 31, 2009 12:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 31, 2009 12:00 AM ADDED : டிச 31, 2009 12:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ரோதக்: ‘பல்கலைக்கழகத்தின் கல்வி மையங்களை மாநிலத்திற்கு வெளியில் திறக்க, அனுமதி வழங்காத போதும், அது தொடர்பாக பத்திரிகைகளில், விளம்பரம் கொடுத்திருப்பது குறித்து, மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகம் விளக்கமளிக்க வேண்டும்’ என, யு.ஜி.சி., கேட்டுள்ளது.


அரியானா மாநிலம், ரோஹ்டக் பகுதியில் அமைந்துள்ளது, மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகம், வெளிமாநிலத்தில் உள்ள பயிற்சி மையங்கள் மற்றும் கல்வி மையங்கள் மூலம் இளங்கலை மற்றும் முதுகலை மேலாண்மை படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பதாக, பத்திரிகைகளில் விளம்பரம் செய்திருந்தது.


இதுகுறித்து, யு.ஜி.சி.,  துணைச் செயலர் எஸ்.சி.சதா கூறியதாவது:
மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகம், இவ்வாறு அறிவிப்பு வெளியிட்டு விளம்பரம் செய்திருப்பது, சுப்ரீம் கோர்ட் விதிமுறைகளுக்கு எதிரானது. மாநிலத்திற்கு வெளியில் உள்ள கல்வி மையங்கள் மூலம் எவ்வித மாணவர்கள் சேர்க்கையும், மேற்கொள்ளக் கூடாது. எனவே, இந்த விளம்பரத்தை மகரிஷி தயானந்த் பல்கலை உடனே, திரும்ப பெற வேண்டும். இவ்விவகாரம் குறித்து 15 நாட்களுக்குள் பல்கலைக்கழகம் சார்பில் விளக்கமளிக்க வேண்டும். இவ்வாறு எஸ்.சி. சதா கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us