தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 தேர்வு முறைகேடு விசாரணை உயர்நீதிமன்றம் உத்தரவு

பிளஸ் 2 தேர்வு முறைகேடு விசாரணை உயர்நீதிமன்றம் உத்தரவு

பிளஸ் 2 தேர்வு முறைகேடு விசாரணை உயர்நீதிமன்றம் உத்தரவு


UPDATED : ஆக 30, 2023 12:00 AM

ADDED : ஆக 30, 2023 05:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 30, 2023 12:00 AM ADDED : ஆக 30, 2023 05:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரையில் பிளஸ் 2 தேர்வு முறைகேடு தொடர்பாக உதவி கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரிக்க போலீஸ் கமிஷனருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரையை சேர்ந்த தந்தை ஒருவர் தாக்கல் செய்த மனு:
எனது மகன் மதுரையில் ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்தார். 2023 மார்ச்-ஏப்ரலில் நடந்த பொதுத் தேர்வின்போது அதே பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது. மகன் தேர்வில் பங்கேற்றார். அவர் (பிரெஞ்ச் 93, ஆங்கிலம் 88, இயற்பியல் 88, வேதியியல் 96, கம்ப்யூட்டர் அறிவியல் 100, கணிதம் 100 மதிப்பெண்) தேர்ச்சியடைந்தார். எனது மகன் மற்றும் மற்றொரு மாணவனின் கணித விடைத்தாளில் முரண்பாடுகள் இருப்பதாகக்கூறி சென்னை அரசு தேர்வுகள்துறை இயக்குனரக அலுவலகத்தில் விசாரணை நடந்தது.கணிதம், இயற்பியல், வேதியியல் விடைத்தாள்களில் எனது மகனின் கையெழுத்தில் வேறுபாடு உள்ளது. மகன் தேர்வில் முறைகேடு செய்துள்ளதால் அவர் எழுதிய அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்வதாகவும், 5 ஆண்டுகளுக்கு தேர்வில் பங்கேற்க ஏன் தடை விதிக்கக்கூடாது என விளக்கம் கோரியும் அரசு தேர்வுகள்துறை இயக்குனரக இணை இயக்குனர் நோட்டீஸ் அனுப்பினார். முறையாக விசாரிக்காமல் முறைகேட்டில் ஈடுபட்டதாகக்கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு இடைக்காலத் தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.ஏற்கனவே விசாரணையில் நீதிபதி, இவ்வழக்கு முடிவுக்கு வரும்வரை மனுதாரர் மகனுக்கு எதிராக எவ்வித மேல்நடவடிக்கையும் எடுக்கக்கூடாது, என உத்தரவிட்டார்.மீண்டும் விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி:
தேர்வு முறைகேட்டை விசாரிக்க உதவி போலீஸ் கமிஷனர் தலைமையில் தனிப்படையை மதுரை போலீஸ் கமிஷனர் அமைக்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரிக்க வேண்டும். அதற்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். போலீஸ் கமிஷனர் செப்.,18 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us