தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ 2ம் கட்ட கலந்தாய்வு இன்றுடன் நிறைவு

மருத்துவ 2ம் கட்ட கலந்தாய்வு இன்றுடன் நிறைவு

மருத்துவ 2ம் கட்ட கலந்தாய்வு இன்றுடன் நிறைவு


UPDATED : ஆக 04, 2011 12:00 AM

ADDED : ஆக 04, 2011 02:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 04, 2011 12:00 AM ADDED : ஆக 04, 2011 02:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆகஸ்ட் 3ம் தேதி வரை கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டு, அவர்களது பிரிவில் இடம் கிடைக்காததால் காத்திருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 327 ஆக உயர்ந்துள்ளது.

அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவ சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் ஜுலை 28ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்விற்கு 502 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் 318 பேர் வரவில்லை, வந்திருந்த 184 பேரில் 2 பேர் எந்த பாடப்பிரிவையும் தேர்வு செய்யாமல் சென்றுவிட்டனர்.

50 பேருக்கு மட்டுமே சேர்க்கை கிடைத்தது. இதில், 10 மாணவரக்ள் சுயநிதி மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடத்திலும், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பிடிஎஸ் படிப்பில் 6 மாணவர்களும், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடத்தில் 34 மாணவர்களும் சேர்க்கை பெற்றனர்.

சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் ஏற்கனவே ஓசி, பிசி, பிசிஎம், எம்பிசி ஆகியப் பிரிவினருக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பிவிட்டன. எனவே, புதன்கிழமை கலந்தாய்விற்கு வந்திருந்த இப்பிரிவு மாணவர்கள் 132 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.

இவர்களையும் சேர்த்து தற்போது மொத்தம் 327 மணவர்கள் காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இன்றைய தினம் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 147 அரசு ஒதுக்கீட்டு இடங்கள், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 12 பிடிஎஸ் இடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 732 அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.

இன்றுடன் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறைவடைகிறது. இரண்டாம் கட்ட கலந்தாய்வில் சேர்க்கை முடிந்த இடங்களில் உருவாகும் காலியிடங்களுக்கும், கலந்தாய்வில் நிரப்பப்படாமல் இருக்கும் காலியிடங்களுக்கும் ஆகஸ்ட் மாதம் 3வது வாரத்தில் மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us