சென்னையில் 2 அதிநவீன சினிமா ஸ்டுடியோக்கள்: முதல்வர்
சென்னையில் 2 அதிநவீன சினிமா ஸ்டுடியோக்கள்: முதல்வர்
UPDATED : ஜூலை 14, 2014 12:00 AM
ADDED : ஜூலை 14, 2014 05:03 PM
சென்னை: தமிழகத்தில், திரைப்படத் துறையின் வளர்ச்சிக்காக தலைநகர் சென்னையில், அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட, இரண்டு சினிமா ஸ்டுடியோக்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
ரூ.15 கோடி செலவில் இந்த ஸ்டுடியோக்கள் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: குளிர்சாதன வசதி கொண்ட இந்த 2 ஸ்டுடியோக்களும், 2.5 ஏக்கரில் அமையப்பெறும் மற்றும் எம்.ஜி.ஆர். அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவன வளாகத்திலேயே அவை அமைக்கப்படும்.
சினிமாத் துறையின் வளர்ந்துவரும் தேவைகளை ஈடுசெய்ய, திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று, இந்த ஸ்டுடியோக்கள் அமைக்கப்படுகின்றன.
ஜி.ஆர். அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவன வளாகத்திலேயே இந்த ஸ்டுடியோக்கள் அமைக்கப்படுவதால், திரைப்படம் மற்றும் மொலைக்காட்சி தொடர்பான படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கும், மிகுந்த பயனுள்ளதாக அமையும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
