UPDATED : டிச 22, 2015 12:00 AM
ADDED : டிச 22, 2015 05:09 PM
சென்னை:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிளஸ் 2 மாணவர்களுக்கு, ராஜலக்ஷ்மி கல்வி நிறுவனம் சார்பில், சிறப்பு இலவச பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுகிறது.
ராஜலக்ஷ்மி
கல்வி நிறுவனத் தலைவர் கூறுகையில், தமிழகத்தில்
இன்னும் சில மாதங்களில்
பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெற உள்ளது.
இன்னிலையில், சென்னையில் ஏற்பட்ட
மழை, வெள்ளத்தால் பள்ளி மாணவர்கள் தங்களது
புத்தகங்கள், குறிப்பேடுகள்
போன்றவற்றை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, மாணவர்களுக்கு உதவும் வகையில் கணிதம் மற்றும் அறிவியல் ஆகிய பாடங்களுக்கு சிறப்பு வகுப்புகள், ராஜலக்ஷ்மி கல்வி நிறுவனம் சார்பில் வழங்கப்படும். விருப்பம் உள்ள மாணவர்கள் hod.maths@rajalakshmi.edu.in என்ற இ-மெயிலில் பதிவு செய்து கொள்ளலாம். வார இறுதி நாள்களில், ஸ்ரீபெரும்புதூர், கீழ்ப்பாக்கம், ராமாபுரம் ஆகிய இடங்களில் முக்கியப் பாடங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும், என்று அவர் கூறினார்.
