தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க அறிவுரை

பிளஸ் 2 தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க அறிவுரை

பிளஸ் 2 தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க அறிவுரை


UPDATED : பிப் 27, 2021 12:00 AM

ADDED : பிப் 27, 2021 05:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 27, 2021 12:00 AM ADDED : பிப் 27, 2021 05:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
மே மாதம் நடக்கும் பிளஸ் 2 தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் அடுத்த மாதம் 6 ம் தேதிக்குள் இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

பள்ளி கல்வித் துறை இணை இயக்குனர் மைக்கேல் பென்னோ விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

வரும் மே மாதம் நடக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்விற்கு தனித் தேர்வர்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடந்தாண்டு நேரடித் தனித் தேர்வராக பிளஸ் 1 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற, பெறாத தேர்வர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத விரும்புவோர் வரும் 6ம் தேதிக்குள், இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
ஆண் தனித் தேர்வுகள் முத்திரையர்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல் நிலைப் பள்ளி வளாக சேவை மையம், பெண் தனித்தேவர்கள் லாஸ்பேட்டை செல்லபெருமாள்பேட்டை விவேகானந்தா மேனிலைப்பள்ளி சேவை மையத்திலும் விண்ணப்பிக்கலாம்.இந்த தேதிகளுக்குள் விண்ணப்பிக்க தவறியவர்கள் வரும் 8, 9ம் தேதிகளில் சேவை மையங்களை அணுகி தேர்வு கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000 சிறப்பு கட்டணம் செலுத்தி ஆன்-லைனில் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்.
தனித் தேர்வர்கள் ஆன்-லைனில் விண்ணப்பங்களை பதிவது குறித்த தகுதி, வழிகாட்டுதல்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us