தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பிளஸ் 2 தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பிளஸ் 2 தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு


UPDATED : நவ 27, 2009 12:00 AM

ADDED : நவ 27, 2009 04:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 27, 2009 12:00 AM ADDED : நவ 27, 2009 04:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.


கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு 43 ஆயிரத்து 60 மாணவ மாணவியர் பிளஸ் 2 தேர்வை சந்திக்கின்றனர். கடந்த ஆண்டை விட 3,706 மாணவ மாணவியர் கூடுதலாக எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் 2010 மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வுகள் நடைபெறவுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் இத்தேர்வு எழுதும் மாணவர்களின் பட்டியலை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சேகரித்து, பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பியுள்ளனர். இதன் அடிப்படையில் கேள்வித்தாள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.


திருப்பூர், பொள்ளாச்சி, கோவை கல்வி மாவட்டங்கள் உள்ளிட்ட கோவை வருவாய் மாவட்டத்தில் இந்த ஆண்டு மொத்தம் 43 ஆயிரத்து 60 மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 9,444 பேரும், திருப்பூர் கல்வி மாவட்டத்தில் 14,022 பேரும், கோவை கல்வி மாவட்டத்தில் 19,594 பேரும் இத்தேர்வை சந்திக்கின்றனர்.


மொத்த எண்ணிக்கையில் வழக்கம் போல் இந்த முறையும் மாணவியரே அதிகம். கோவை வருவாய் மாவட்டத்தில் 19 ஆயிரத்து 60 மாணவர்களும், 24 ஆயிரம் மாணவியரும் தேர்வு எழுதுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவ மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


கடந்த ஆண்டு 19 ஆயிரத்து 421 மாணவர்களும், 21 ஆயிரத்து 933 மாணவியரும் என, மொத்தம் 39,354 பேர் தேர்வு எழுதினர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3,706 மாணவ மாணவியர் கூடுதலாக எழுதுகின்றனர். தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த ஆசிரியர்களுக்கு பாடவாரியாக இந்த ஆண்டு பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதால், கடந்த ஆண்டுகளை விட தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் என கல்வி அலுவலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us