தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 தொழிற்கல்வி பிரிவு மாணவர்களின் எதிர்பார்ப்பு

பிளஸ் 2 தொழிற்கல்வி பிரிவு மாணவர்களின் எதிர்பார்ப்பு

பிளஸ் 2 தொழிற்கல்வி பிரிவு மாணவர்களின் எதிர்பார்ப்பு


UPDATED : ஜன 02, 2010 12:00 AM

ADDED : ஜன 02, 2010 11:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 02, 2010 12:00 AM ADDED : ஜன 02, 2010 11:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: பிளஸ் 2 தொழிற்கல்வி மாணவர்களுக்கும், கணித தேர்வுக்கு முன் படிப்பதற்கான இடைவெளி தேவை என எதிர்பார்க்கின்றனர்.


பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1ம் தேதியும், 23ம் தேதி பத்தாம் வகுப்பு மற்றும் மெட்ரிக்., தேர்வுகளும் துவங்க உள்ளன. இதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டு விட்டது. இந்த அட்டவணைப்படி, பிளஸ் 2ல் தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிப் பாடங்கள் மார்ச் 5ம் தேதிக்குள் முடிவடைகின்றன. பின் நடக்கும் கணிதம், அறிவியல் உள்பட முக்கிய பாடங்களுக்கு 3 நாள், 4 நாள் என இடைவெளி உள்ளது. இதனால் கடினமான பாடங்களுக்கு தயாராவது எளிதாக இருக்கும். ஆனால், மேல்நிலையில் தொழிற் பிரிவு மாணவர்களின் (பெற்றோர்) எதிர்பார்ப்போ வேறுவிதமாக உள்ளது.


இம்மாணவர்களுக்கு மொழிப்பாடம் மார்ச் 5ம் தேதி முடிந்த பின், எட்டு நாட்களுக்குப் பிறகு எழுத்துத் தேர்வு மார்ச் 13ம் தேதி துவங்குகிறது. அதன் பின் மார்ச் 15ல் கணித பாடத் தேர்வு நடக்க உள்ளது. தொழிற் பிரிவில் (எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல்) கணிதம் பாடமும் உள்ளதால், 13ம் தேதி தேர்வுக்கு பின், கணிதபாடத்திற்கு ஒரு நாள் தான் உள்ளது.


மார்ச் 5 முதல் 13 வரை, எட்டு நாட்கள் இடைவெளி உள்ள இப்பிரிவு மாணவர்களுக்கு, 13ம் தேதி நடக்கும் தேர்வை, ஓரிரு நாட்கள் முன்னதாக நடத்தினால் கணித தேர்வுக்கு, மற்ற பிரிவு மாணவர்களைப் போல தயாராக, கூடுதல் கால அவகாசம் கிடைக்கும்.


இதுதொடர்பாக கல்வித் துறையினர் கூறியதாவது: மாணவர்கள் நலன் அடிப்படையில் அட்டவணையை தயார் செய்கிறது. இதில் ஒரு தரப்பினருக்கு தேவையான அவகாசம் இல்லை என்பதற்காக, அதை மாற்றி அமைக்க முடியாது. ஒவ்வொரு பாடத்திற்கும், இடைவெளி தரப்பட வேண்டும் என்பது கட்டாயமானது அல்ல. அப்படி தரப்பட்டால் ஒவ்வொருவரும் அதை ஒரு கோரிக்கையாகவே வலியுறுத்திவிடுவர். எனவே தொழிற்பிரிவு மாணவர்களுக்கான, எதிர்பார்ப்பு நிறைவேறுவது, அரசின் கையில்தான் உள்ளது, என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us