தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொறியியல் 2ம் ஆண்டு நேரடி சேர்க்கையில் 18,419 பேர் சேர்ந்தனர்

பொறியியல் 2ம் ஆண்டு நேரடி சேர்க்கையில் 18,419 பேர் சேர்ந்தனர்

பொறியியல் 2ம் ஆண்டு நேரடி சேர்க்கையில் 18,419 பேர் சேர்ந்தனர்


UPDATED : ஜூலை 04, 2014 12:00 AM

ADDED : ஜூலை 04, 2014 10:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 04, 2014 12:00 AM ADDED : ஜூலை 04, 2014 10:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி: பி.இ., மற்றும் பி.டெக்., இரண்டாம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நிறைவடைந்தது. இதில்,18 ஆயிரத்து 419 பேர் சேர்க்கைக்கான அனுமதி பெற்றனர்.

டிப்ளமோ, பி.எஸ்.சி., கணிதம் படித்தவர்கள், பி.இ., மற்றும் பி.டெக்.,கில், இரண்டாம் ஆண்டு, நேரடியாக சேருவதற்கான கவுன்சிலிங், காரைக்குடி அழகப்ப செட்டியார் அரசு இன்ஜி., கல்லுாரியில் ஜூன் 19 ல் துவங்கி, நேற்றுடன் முடிந்தது. தமிழகம் முழுவதும் உள்ள 534 இன்ஜி., கல்லுாரிகளுக்கு ஒரு லட்சத்து 4 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. மொத்தம் 21 ஆயிரத்து 428 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 18 ஆயிரத்து 530 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. 18 ஆயிரத்து 419 பேர் சேர்க்கை அனுமதி பெற்றனர்.

சிவில் பிரிவில் 4,220 பேரில் 3,736 பேரும், மெக்கானிக்கல் பிரிவில் 7,275 பேரில் 6,217 பேரும், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 9,505 பேரில் 8,229 பேரும், கெமிக்கல் பிரிவில் 111, டெக்ஸ்டைல் 95, பிரிண்டிங் 4, லெதர் பிரிவில் 3 பேரும் சேர்க்கை ஆணை பெற்றனர் என இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை செயலர் மாலா தெரிவித்தார். உடன் ஒருங்கிணைப்பாளர் கணேசன் இருந்தார்.

தொழில் கல்வி படிக்கும் முதல் பட்டதாரிகளுக்கு பயிற்சி கல்வி கட்டண (டியூஷன் பீஸ்) சலுகையை அரசு வழங்குகிறது. பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கையில் சேர்ந்த 18 ஆயிரம் பேரில் 12 ஆயிரத்து 37 பேர், முதல் தலைமுறை பட்டதாரி சான்று சமர்ப்பித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us