UPDATED : நவ 06, 2009 12:00 AM
ADDED : நவ 06, 2009 02:17 PM
அ நிறம் | அளவு
பொதுத் தேர்வில் தமிழைப் பாடமாகக் கொண்டு முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்கள் அரசு சார்பில் பரிசுத் தொகை வழங்கப்பட்டு கவுரவிக்கப்படுகின்றனர்.
கடந்த ஆண்டு வரை 10ம் வகுப்பு, மெட்ரிக் வகுப்புகளுக்கு முதல் பரிசாக ரூ7,500, இரண்டாம் பரிசாக ரூ.6,000 மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. பிளஸ்2 வகுப்புக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.12 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.நடப்பு ஆண்டு முதல் பரிசுத் தொகையை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பத்தாம் வகுப்பில் முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.20 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். பிளஸ் டூ வகுப்பில் முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.30 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என்று அரசு முதன்மை செயலர் குற்றாலிங்கம் தெரிவித்துள்ளார்.
