தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டிச., 2ல் தலைவா பயிற்சி

டிச., 2ல் தலைவா பயிற்சி

டிச., 2ல் தலைவா பயிற்சி


UPDATED : நவ 01, 2023 12:00 AM

ADDED : நவ 01, 2023 09:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 01, 2023 12:00 AM ADDED : நவ 01, 2023 09:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அரசியலில் சாதிக்க நினைப்போர், உச்சம் தொடும் வகையில் பயிற்சி அளித்து வரும் அஸ்பயர் கல்வி நிறுவனம், கடந்த ஆண்டைப் போலவே, இந்த முறையும் சென்னையில் ஒருநாள், தலைவா பயிற்சி அரங்கை நடத்த உள்ளது.சென்னையில், டிச., 2ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, முழு நேர பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது. இதற்கான முன் பதிவு துவக்கப்பட்டுள்ளது.இது குறித்து, பயிற்சி ஒருங்கிணைப்பாளர் அஸ்பயர் சுவாமிநாதன் கூறியதாவது:
இன்று தொழில்நுட்ப வளர்ச்சி அபரிதமாக உள்ளது. மக்கள் எது உண்மை, எது பொய் என உணரத் துவங்கி விட்டனர். அரசியலில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம், பெரும்பாலானோரிடம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அரசியலில் நுழைந்து, சாதிக்க விரும்புவோருக்காக, நவீன அரசியலுக்கு தேவையான பயிற்சி அளிக்க, அஸ்பயர் கல்வி நிறுவனம் சார்பில், தலைவா என்ற பெயரில், கடந்தாண்டு மூன்று நாள் பயிற்சி அரங்கு நடத்தியது.இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்தே, இந்த ஆண்டும் தொடர்கிறது. ஒரு நாள் பயிற்சி அரங்கில், அரசியல் கட்சிகளின் கொள்கைகள், அவை நிறைவேற்றிய நலத்திட்டங்கள், சமூக வலைதளங்களில் நடக்கும் அரசியல் என, அனைத்து அம்சங்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.தமிழகம் சந்தித்த தேர்தல்கள் குறித்த புள்ளி விபரம், மாறி வரும் அரசியல் சூழ்நிலை, தேர்தல் கூட்டணி, பிரசார வடிவமைப்பு போன்றவை குறித்தும் பயிற்சி அளிக்கப்படும். கடந்தாண்டு நடந்த மூன்று நாள் முகாமில், சிறப்பு விருந்தினராக, அமைச்சர் தியாகராஜன், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பங்கேற்றனர். எதிர்கால அரசியல் தலைவர்களாக உருவெடுக்க விரும்பும் இளைஞர்களுக்கு தேவையான, தலைமைப் பண்புகள் குறித்து எடுத்துரைத்தனர்.இவ்வாறு அவர் கூறினார்.மேலும் விபரங்களுக்கு 95783 34455 என்ற மொபைல் போன் எண்ணில் அல்லது https://www.asthr.in/thalaivamini என்ற இணைய தள முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us