தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/42 கிராமங்களில் துாய்மைப்பணி: என்.எஸ்.எஸ்., மாணவர்கள் களப்பணி

42 கிராமங்களில் துாய்மைப்பணி: என்.எஸ்.எஸ்., மாணவர்கள் களப்பணி

42 கிராமங்களில் துாய்மைப்பணி: என்.எஸ்.எஸ்., மாணவர்கள் களப்பணி


UPDATED : நவ 01, 2023 12:00 AM

ADDED : நவ 01, 2023 09:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 01, 2023 12:00 AM ADDED : நவ 01, 2023 09:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:
மாவட்டத்தில் எட்டு நாட்கள் 42 பள்ளிகளை சேர்ந்த 1300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 42 கிராமங்களை தத்து எடுத்து, அப்பகுதியில் தங்கி துாய்மைப்பணி, விழிப்புணர்வு பணிகள் செய்தனர்.பள்ளிக்கல்வித்துறை என்.எஸ்.எஸ்., திட்டத்தின் சார்பில் அக்., 23 முதல் 31 வரை சிறப்பு முகாம்கள் நடந்தன. இதில் ஆதரவற்ற முதியோர்களுக்கு 200 போர்வைகள் வழங்கியும், கிராமங்களில் உள்ள குளக் கரைகளில் 14 ஆயிரம் பனை விதைகளை மாணவர்கள் நடவு செய்தனர்.போடி பனை முருகன் டிரஸ்ட் இணைந்து 10 ஆயிரம் பனை நாற்றுகள் உருவாக்கும் பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. வெங்கடாசலபுரம் வரத வேங்கடரமண மேநிலைப்பள்ளி, ராயப்பன்பட்டி எஸ்.யு.எம்., மேல்நிலைப்பள்ளி சார்பில் மேகமலை பகுதியில் பிளாஸ்டிக், மதுபாட்டில்கள் அகற்றப்பட்டன. அப்பகுதியில் 500 மஞ்சள் பைகளை எஸ்.யு.எம். பள்ளி தாளாளர் பிரபாகர், ஹைவேவிஸ் பேரூராட்சி தலைவர் இங்கர்சால் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதுதவிர 42 கிராமங்களில் மழை காலம் என்பதால் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. வடுகப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில், கண்ணக்கரையில் பொது மருத்துவ முகாம் நடந்தது. இதில் 100 மலை வாழ் குடும்பத்தினர் பயனடைந்தனர். மருத்துவ பொருட்கள் வழங்கப்பட்டன. டி.பொம்மிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் 10 ஆயிரம் விதைப்பந்துகள் என்.எஸ்.எஸ்., மாணவர்களால் தயாரிக்கப்பட்டு மலைப்பகுதிகளில் துாவப்பட்டன. முகாம்களில் மரக்கன்றுகள் நடவு, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, போக்சோ சட்ட விழிப்புணர்வு, தீத்தடுப்பு பயிற்சி நடத்தப்பட்டன.சிந்தலைச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளி, ஜ.கா.நி., மேல்நிலைப்பள்ளி, சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, திருமலாபுரம் நாடார் மேல்நிலைப்பள்ளி சிறப்பு முகாம்களை சி.இ.ஓ., இந்திராணி, மாவட்ட கல்வி அலுவலர்கள் வசந்தி, சங்குமுத்தையா, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் நேருராஜன் ஆகியோர் அடிக்கடி ஆய்வு செய்து, பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us