தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கலைவிழா போட்டியில் 5500 மாணவர்கள் பங்கேற்பு

கலைவிழா போட்டியில் 5500 மாணவர்கள் பங்கேற்பு

கலைவிழா போட்டியில் 5500 மாணவர்கள் பங்கேற்பு


UPDATED : நவ 01, 2023 12:00 AM

ADDED : நவ 01, 2023 09:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 01, 2023 12:00 AM ADDED : நவ 01, 2023 09:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் 5500 அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் மாவட்ட அளவிலான கலைத் திருவிழாப் போட்டி இன்று துவங்குகிறது.மாணவர்களின் கலைத் திறனை வெளிக்கொணரும் விதமாக அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி மற்றும் வட்டார அளவில் போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட அளவில் இன்று முதல் நவ.3 வரை 7 இடங்களில் கலைத் திருவிழாப் போட்டி நடக்க உள்ளது. இதில் 5500 அரசுப் பள்ளி மாணவர்கள்,1000 ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து தெரிவித்தார்.அவர் கூறியதாவது: 
அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகள் நடக்கிறது. வட்டார அளவிலான கலை போட்டிகளில் 12 ஒன்றியங்களைச் சேர்ந்த 54,000 அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கு பெற்றனர். ஒன்றிய அளவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான கலைத் திருவிழாப் போட்டிகள் இன்று முதல் நடக்கிறது.188 போட்டிகள் நடத்தப்படுகின்றது. 6 முதல் 8 ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9 மற்றும் 10ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், பிளஸ் 1, பிளஸ் 2, வரை ஒரு பிரிவாக போட்டி நடக்கவுள்ளது. 6 முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் கவின்கலை, நுண்கலை, இசை வாய்ப்பாட்டு, கருவி இசை, நடனம், நாடகம், மொழித்திறன் எனும் 6 தலைப்பின் கீழ் நடக்கிறது. 9 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கவின்கலை நுண்கலை, இசை வாய்ப்பாட்டு, கருவி இசை-தோற்கருவி, கருவி இசை துளை காற்றுக் கருவிகள், கருவி இசை தந்திக் கருவிகள், இசை சங்கம், நடனம், நாடகம், மொழித் திறன் எனும் 9 தலைப்பின் கீழ் போட்டிகள் நடக்க உள்ளது.பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு கார்கலை நுண்கலை, இசை வாய்ப்பாட்டு, கருவி இசை தோற்கருவி, கருவி இசை - துணை காற்றுக் கருவி, கருவி இசை - தந்திக் கருவிகள், இசைச் சங்கம், நடனம், நாடகம், மொழித்திறன் எனும் 9 தலைப்புகளில் போட்டிகள் நடக்க உள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் புனித ஜஸ்டின் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, புனித ஜஸ்டின் பதின்ம மேல்நிலைப் பள்ளி, புனித மைக்கேல் பதின்ம மேல்நிலைப் பள்ளி, மன்னர் மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி மருதுபாண்டியர் நகர், ரோஸ்லின் கல்வியியல் கல்லுாரி உள்ளிட்ட 7 இடங்களில் போட்டி நடக்கிறது. மாவட்ட அளவில் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்கள் நவ.21 முதல் நவ.24 வரை மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கு பெறுவர். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களின் தரவரிசையில் முதன்மை பெறும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us