தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு

பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு

பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு


UPDATED : மே 12, 2026 06:19 PM

ADDED : மே 12, 2026 06:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 12, 2026 06:19 PM ADDED : மே 12, 2026 06:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் பிரசாந்த் கேடயம் வழங்கி பாராட்டினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. இதில் கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 588 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடமும், மாவட்ட அளவில் சிறப்பிடமும் பிடித்த மாணவி கலைச்செல்விக்கு கலெக்டர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற கரடிசித்தூர், நெடுமானுார், எஸ்.வி.பாளையம், விளந்தை, எலவனாசூர்கோட்டை, ஏ.குமாரமங்கலம், வேலுார், கொட்டப்புத்துார் ஆகிய அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு கேடயம் வழங்கிய கலெக்டர், மாணவ, மாணவிகளுக்கு சிறப்பான கல்வி கற்பித்து அவர்களின் எதிர்காலம் சிறக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதில் சி.இ.ஓ., கார்த்திகா உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us