தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்கள் பெயர் பதிவு தீவிரம்

பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்கள் பெயர் பதிவு தீவிரம்

பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்கள் பெயர் பதிவு தீவிரம்


UPDATED : டிச 11, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 11, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியருடைய பெயர் உள்ளிட்ட விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி, சென்னையில் மும்முரமாக நடந்து வருகிறது.
பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து செய்முறைத் தேர்வுகள் நடைபெற உள்ளன. மார்ச் முதல் வாரத்தில் இருந்து எழுத்துத் தேர்வுகள் துவங்கி விடும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை எழுத உள்ள மாணவ, மாணவியரின் விவரங்கள் மாவட்ட வாரியாக பெறப்பட்டுள்ளன. இந்த விவரங்கள், சென்னையில் உள்ள டேட்டா சென்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பத்தாம் வகுப்பு தேர்வை எட்டு லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களும், பிளஸ் 2 தேர்வை ஆறு லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களும் எழுதுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட வாரியாக பெறப்பட்ட விவரங்களை, டேட்டா சென்டரில் பதிவு செய்யும் பணி தற்போது மும்முரமாக நடந்து வருவதாக துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாணவர்களின் பெயர், வகுப்பு, அவர்கள் எழுத உள்ள பாடங்கள் வரிசை, பள்ளியின் பெயர், மாவட்டத்தின் பெயர் போன்ற விவரங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
தேர்வு நெருங்கும் போது, ஒவ்வொரு மாணவருக்கும் பதிவெண்களும் வழங்கப்படும். விடைத்தாள் திருத்தப்பட்ட பிறகு, அந்தந்த பாடங்களுக்கு நேராக உரிய மதிப்பெண்கள் பதிவு செய்யப்படும். பள்ளிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் சரியானவை தானா என்பதை மேலும் ஒருமுறை சரி பார்ப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதில், ஏதாவது திருத்தங்கள் இருந்தால், உடனடியாக அவை சரி செய்யப்படும். இதன் பிறகே, பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்த சரியான புள்ளி விவரங்கள் தெரியவரும். இதற்கிடையே, தேர்வு அட்டவணை தயாரிக்கும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் மூத்த ஆசிரியர்களை கலந்தாலோசித்து, தற்காலிக தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது.
மொழிப்பாட தேர்வுகள் தவிர, மற்ற முக்கிய பாட தேர்வுகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு நாள், இரண்டு நாள் இடைவெளி கிடைக்கும் வகையில் அட்டவணை தயாரிக்கப்படுகிறது. இந்தப் பணி விரைவில் முடிவடைய உள்ளது. அதன் பின், பள்ளி தலைமை ஆசிரியர்களின் கருத்துக்களை கேட்பதற்காக அட்டவணை அனுப்பி வைக்கப்படும்.
ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று பெரும்பாலான ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தால், அந்த மாற்றங்கள் நிறைவேற்றப்படும்.
அதற்கு வாய்ப்புகள் இருக்காது என்பதால், தற்காலிக அட்டவணையை இறுதி அட்டவணையாக உறுதி செய்து, ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us