தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜி-20 உச்சி மாநாடு உத்திரபிரதேசத்தில் தொடங்கியது

ஜி-20 உச்சி மாநாடு உத்திரபிரதேசத்தில் தொடங்கியது

ஜி-20 உச்சி மாநாடு உத்திரபிரதேசத்தில் தொடங்கியது


UPDATED : ஆக 18, 2023 12:00 AM

ADDED : ஆக 18, 2023 04:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 18, 2023 12:00 AM ADDED : ஆக 18, 2023 04:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வாரணாசி:
மத்திய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் இளைஞர் விவகாரத் துறை நடத்தும் ஜி 20 யின் கீழ் ஒய் 20 உச்சி மாநாடு நேற்று வாரணாசியிலுள்ள இந்து பல்கலையில் தொடங்கியது.தொழில்நுட்பத்தின் பயன்பாடு டொமைன்கள், சூப்பர் கம்ப்யூட்டிங் மையம் நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையை எவ்வாறு மேம்படுத்தியுள்ளது என்பதை ஐஐடி பி.எச்.யு பேராசிரியர்கள் விளக்கினார்கள்.வாரணாசியிலுள்ள ருத்ராட்ச் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையத்தில் வெவ்வேறு அமர்வுகள் மற்றும் விளக்கக்காட்சிகள் நடந்தன. அமர்வுகளில் ஆராய்ச்சி நடவடிக்கைகள், வேலைவாய்ப்பு நடவடிக்கைகள், கண்டுபிடிப்புகள், தொழில் காப்பகங்கள் ம்ற்றும் கலாச்சாரம் குறித்து விவாதிக்கப்பட்டன. பின்னர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், புத்தரின் வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கும் ஒலி, ஒளி நிகழ்ச்சிகள் நடந்தன.இம்மாநாடு வரும் 20ம் தேதி வரை நடைபெறுகிறது. கடந்த சில மாதங்களாக நடைபெற்ற பல்வேறு விவாதங்கள் மற்றும் விவாதங்களின் முடிவுகளிலிருந்து உருவாக்கப்பட்ட ஒய் 20 அறிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும், இறுதி செய்யவும் மற்றும் கையெழுத்திடவும் முன்னணி நிபுணர்கள், தேசிய மற்றும் சர்வதேச பிரதிநிதிகள், ஜி 20 நாடுகளின் பிரதிநிதிகள் விருந்தினர் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளை ஒய் 20 உச்சி மாநாடு ஒருங்கிணைக்கிறது.இன்று மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சர் நிசித் பிரமானிக் மற்றும் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us