UPDATED : நவ 26, 2026 04:26 PM
ADDED : நவ 26, 2026 04:26 PM
மதுரை:
மதுரையில் 150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் நவ. 28ல் நடக்கிறது.
மதுரைக் கல்லுாரி வளாகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் அன்று காலை 9:00 முதல் மதியம் 3:00 மணி வரை இம்முகாம் நடைபெறும். 8ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டம், ஐ.டி.ஐ., டிப்ளமோ, நர்சிங், பொறியியல் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.
விரும்புவோர் மற்றும் வேலையளிக்கும் நிறுவனங்கள் [http://www.tnprivatejobs.tn.gov.in] (http://www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளங்களில் தங்கள் விவரங்களைப் பதிவேற்றம் செய்து முன்பதிவு செய்யலாம். வரும்போது, பயோடேட்டா, கல்விச் சான்றுகளின் நகல், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு போட்டோவுடன் வரவேண்டும்.
நியமனம் பெறுவோரின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு பாதிக்காது. விவரங்களுக்கு 94990 55918 ல் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
