தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எக்ஸல் பொறியியல் கல்லுாரி சார்பில் சக்தி வாக்-2026 விழிப்புணர்வு பேரணி

எக்ஸல் பொறியியல் கல்லுாரி சார்பில் சக்தி வாக்-2026 விழிப்புணர்வு பேரணி

எக்ஸல் பொறியியல் கல்லுாரி சார்பில் சக்தி வாக்-2026 விழிப்புணர்வு பேரணி


UPDATED : நவ 26, 2026 04:26 PM

ADDED : நவ 26, 2026 04:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2026 04:26 PM ADDED : நவ 26, 2026 04:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குமாரபாளையம்:
குமாரபாளையம் எக்ஸல் பொறியியல் கல்லுாரி, பெண்கள் மேம்பாட்டுக்குழு, குமாரபாளையம் ரோட்டரி சங்கம் இணைந்து, பெண்களின் பாதுகாப்பு, பாலின சமத்துவம், பெண்கள் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், 'சக்தி வாக்-2026' என்ற விழிப்புணர்வு பேரணியை நடத்தின.

பெண்கள் மேம்பாட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர்களான, மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல் துறை உதவிப்பேராசிரியர் ராஜேஸ்வரி, மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் பொறியியல் துறை உதவிப்பேராசிரியர் அனிதாராணி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து தொடங்கிய பேரணி, அரசு மருத்துவமனை வரை சென்று நிறைவடைந்தது. பேரணியில், பெண்கள் பாதுகாப்பு, பெண் கல்வி, பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியும் சென்றனர்.

மேலும், பெண்களுக்கு பாதுகாப்பான, சமத்துவமான மற்றும் மரியாதையான சமூக சூழலை உருவாக்க உறுதுணையாக இருப்போம் என, உறுதிமொழி ஏற்றனர்.

இதில், 50 மாணவியர், பேராசிரியர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர். குமாரபாளையம் ரோட்டரி சங்கம், யங் இந்தியன்ஸ், ஸ்டார்ட் அப் டிஎன், எக்ஸல் தொழில்நுட்ப வணிக இன்குபேஷன் மையம் ஆகிய அமைப்புகளுக்கு, கல்லுாரி நிர்வாகம் நன்றி தெரிவித்தது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us