பள்ளி மாணவர்கள் 4,026 பேர் கல்லுாரி களப்பயணம் தொடக்கம்
பள்ளி மாணவர்கள் 4,026 பேர் கல்லுாரி களப்பயணம் தொடக்கம்
UPDATED : நவ 26, 2026 04:27 PM
ADDED : நவ 26, 2026 04:28 PM
நாமக்கல்:
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், அரசு பள்ளி மாணவர்கள், 4,026 பேருக்கு, கல்லுாரி களப்பயணத்தை, கலெக்டர் மதுபாலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது, அவர் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ், 2026 - 27ம் கல்வியாண்டில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிளஸ் 2 மாணவர்களிடையே, உயர்கல்வி குறித்த ஆர்வத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில், கல்லுாரி களப்பயணம் நடக்கிறது.
இதில், 88 பள்ளிகளை சேர்ந்த, 4,026 மாணவர்கள், நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவ கல்லுாரி, கால்நடை மருத்துவ கல்லுாரி, கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, சட்டக்கல்லுாரி, செவிலியர் கல்லுாரி மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி உள்ளிட்ட, 30 உயர்கல்வி நிறுவனங்களுக்கு நேரில் அழைத்து செல்லப்பட உள்ளனர்.
இக்கல்லுாரி களப்பயணம் மூலம், கல்லுாரிகளில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள், வழங்கப்படும் இளங்கலை படிப்புகள், உதவித்தொகை திட்டங்கள், போட்டித் தேர்வுகள், வேலைவாய்ப்புகள், கலைசாரா விழாக்கள் உள்ளிட்டவற்றை மாணவர்கள் அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாதவன், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
