தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அக்டோபர் 29-ம் தேதி உலக இன்டர்நெட் தினம்

அக்டோபர் 29-ம் தேதி உலக இன்டர்நெட் தினம்

அக்டோபர் 29-ம் தேதி உலக இன்டர்நெட் தினம்


UPDATED : அக் 29, 2023 12:00 AM

ADDED : அக் 29, 2023 10:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2023 12:00 AM ADDED : அக் 29, 2023 10:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 29-ம் தேதி சர்வதேச இன்டர்நெட் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 2005-ம் ஆண்டு முதல் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1969-ம் ஆண்டு இதே நாளில் முதன்முறையாக அமெரிக்காவில் இன்டர்நெட் மூலம் இரண்டு கம்ப்யூட்டர்களுக்கு இடையே முதல் செய்தி அனுப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியை நினைவு படுத்தும் வகையிலேயே இந்த நாளில் சர்வதேச இன்டர்நெட் தினம் கொண்டாடப்படுகிறது.ஸ்டான்போர்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் வைத்து பேராசிரியர் லியோனார்டு கிளீன்ராக் மற்றும் அவரது மாணவர் சார்லி கிலைன் ஆகியோர் இணையம் மூலம் இந்த முதல் செய்தி பரிமாற்றத்தை நிகழ்த்தினர்.அவர்கள் முதல் செய்தியாக லாக்கின் என்ற வார்த்தையை அனுப்ப முயற்சி செய்தனர். ஆனால் எல் மற்றும் ஓ என்ற எழுத்துக்களை தட்டச்சு செய்த போது கணினி செயல் இழந்ததால் எல்ஓ  என்ற வார்த்தையே முதல் செய்தியாக அனுப்பப்பட்டது. அதன் பின் ஒரு மணிநேரம் கழித்து மீண்டும் லாக்கின் என்ற வார்த்தையை அவர்கள் அனுப்பினர். அப்போது இன்டர்நெட்டுக்கு அர்பாநெட் என பெயர்.அன்று தொடங்கிய இணையத்தின் சேவை பல வகைகளிலும் கிளை விட்டு வளர்ந்து, புதிய பல பரிணாமங்களை அடைந்து இன்று, மனிதர்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இன்டர் நெட் இல்லாத உலகத்தை இன்று கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.இந்தியாவில் உள்ள இன்டர் நெட் பயனர்கள் சராசரியாக 107 நிமிடங்கள் இன்டர்நெட்டில் செலவிடுகிறார்கள். இந்தியா, மொபைல் இணைய பதிவிறக்க வேகத்தில் உலக அளவில் முக்கிய இடத்தில் இருக்கிறது.உலகில் 530 கோடி பேர் இன்டெர்நெட் பயன்படுத்துகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us