தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பசு சாணத்தில் தயாராகும் சோப்பு, அகல் விளக்கு

பசு சாணத்தில் தயாராகும் சோப்பு, அகல் விளக்கு

பசு சாணத்தில் தயாராகும் சோப்பு, அகல் விளக்கு


UPDATED : அக் 29, 2023 12:00 AM

ADDED : அக் 29, 2023 10:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2023 12:00 AM ADDED : அக் 29, 2023 10:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பசுவின் சாணத்தை பயன்படுத்தி, அத்தியாவசிய பொருட்களை தயாரிக்கலாம் என்பதற்கு, மைசூரின் கோசாலை முன்னுதாரணமாக திகழ்கிறது.பொதுவாக பசுவின் சாணத்துக்கு, ஹிந்து மதத்தில் மகத்துவமான இடம் உள்ளது. புனிதமானதாக கருதப்படுகிறது. கிராமப்புறங்களில் இப்போதும் பசுவின் சாணத்தால், வீடுகள் மெழுகுவது, வாசல் தெளித்து கோலம் போடுவதை பார்க்கலாம்.சாணத்தால் விநாயகர் பிடித்து பூஜை செய்வதும் உண்டு. சாணத்தால் தயாரிக்கப்பட்ட வறட்டியே, விபூதியாக பயன்படுகிறது. சாணத்தில் பயனுள்ள பொருட்களும் தயாரிக்கலாம் என்பதற்கு, மைசூரின் கோசாலை வழிகாட்டியாக அமைந்துள்ளது.மைசூரு, கே.ஆர்., நகரின், ஹம்பாபுரா கிராமத்தில் கோசாலை உள்ளது. கிராமத்தின் சுபாஷ் மெம்மொரியல் அறக்கட்டளை ஒருங்கிணைப்பில், கோசாலையில் உற்பத்தியாகும் பசுவின் சாணம், கோமியத்தை பயன்படுத்தி, அகல் விளக்குகள், கொசுவர்த்தி, சோப்பு, பலவிதமான சூர்ணங்கள், வறட்டி உட்பட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.சாணத்தில் தயாரிக்கப்பட்ட அகல் விளக்கின் விலை ஒன்றுக்கு ஐந்து ரூபாய், ஒரு வறட்டி பத்து ரூபாய், கொசுவர்த்திக்கு 50 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இத்தகைய பொருட்களுக்கு, நல்ல மவுசு உள்ளது. பலரும் வாங்கி செல்கின்றனர். இதேபோன்று, மற்ற கோசாலைகளிலும் பயனுள்ள பொருட்களை தயாரிக்கலாம்.- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us