மே 29 முதல் பள்ளிகள் இயங்கும் 245 வேலை நாட்கள் என அறிவிப்பு
மே 29 முதல் பள்ளிகள் இயங்கும் 245 வேலை நாட்கள் என அறிவிப்பு
UPDATED : ஏப் 15, 2026 07:25 PM
ADDED : ஏப் 15, 2026 07:27 PM
பெங்களூரு:
'மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் அரசு, அரசு உதவி பெறும் துவக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் மே 29 ம் தேதி முதல் திறக்கப்படும்' என பள்ளி கல்வி மற்றும் இலக்கிய துறை அறிவித்து உள்ளது.
பள்ளி
க்
கல்வி, இலக்கிய துறை வெளியிட்டு உள்ள அறிக்கை:
மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் அரசு, அரசு உதவி பெறும் துவக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் மே 29 ம் தேதி முதல் திறக்கப்படும். பள்ளியின் முதல் பருவம் மே 29 ம் தேதி முதல் அக்., 2ம் தேதி வரையிலும்; இரண்டாம் பருவம் அக்., 22 முதல் 2027 ஏப்., 10 ம் தேதி வரையிலும் நடக்கும்.
அக்., 3 ம் தேதி முதல் அக்., 21ம் தேதி வரை தசரா விடுமுறை அளிக்கப்படுகிறது. எனவே, மாணவர்கள் பள்ளியில் சேர்க்கும் செயல்பாடுகளை, ஜூன் 30 ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். பள்ளியை விட்டு விலகிய 6 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள், மீண்டும் பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்படும்.
கல்வியாண்டில் மொத்தம் 365 நாட்களில், 119 நாட்கள் விடுமுறை உள்ளன. 245 நாட்கள் பள்ளி வேலை நாட்களாக கருதப்படுகிறது.
வேலை நாட்கள், 26 நாட்கள் தேர்வுகள், மதிப்பீட்டு பணிகளுக்கும்; 24 நாட்கள் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளை நிர்வகிக்கவும்; 10 நாட்கள் மதிப்பீடு மற்றும் முடிவு பகுப்பாய்வு பணிகளுக்கும்; நான்கு நாட்கள் பள்ளி உள்ளூர் விடுமுறைக்கும்; 181 நாட்கள் கற்றல் செயல்முறைக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
மற்றபடி மாணவர் சேர்க்கை, பள்ளி துவக்க விழா தொடர்பான வழக்கமான செயல்பாடுகள் அளிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.
