தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து இன்று வெளியேறுகிறது லேண்டர்

சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து இன்று வெளியேறுகிறது லேண்டர்

சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து இன்று வெளியேறுகிறது லேண்டர்


UPDATED : ஆக 17, 2023 12:00 AM

ADDED : ஆக 17, 2023 09:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 17, 2023 12:00 AM ADDED : ஆக 17, 2023 09:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள, சந்திரயான் - 3 விண்கலத்தின் கடைசி கட்ட துாரம் குறைப்பு முயற்சி நேற்று வெற்றிகரமாக நடந்தது. இதையடுத்து, நிலவுக்கு மேலும் நெருக்கத்துக்கு விண்கலம் அடைந்துள்ளது. விண்கலத்தில் இருந்து லேண்டர் சாதனம் இன்று(ஆக.,17) வெளியேற உள்ளது.நிலவை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் - 3 விண்கலம், ஜூலை, 14ம் தேதி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து அனுப்பப்பட்டது. இதன் செயல்பாடுகளை, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். புவி வட்டப் பாதையில் இருந்து, நிலவு வட்டப் பாதைக்குள் நுழைந்த விண்கலம், நிலவை சுற்றி வந்தது. இதற்கிடையே சுற்றுப் பாதை தொலைவு படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. இதுவரை, நான்கு முறை இந்த தொலைவு குறைக்கப்பட்ட நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசி கட்ட துாரம் குறைப்பு முயற்சி நேற்று வெற்றிகரமாக நடந்தது.இதையடுத்து, சந்திரயான் - 3 விண்கலத்தில் உள்ள, புரபல்ஷன் மாட்யூல் எனப்படும் உந்து கலத்தில் இருந்து, லேண்டர் எனப்படும் நிலவில் தரையிறங்க உள்ள சாதனம் இன்று பிரிக்கப்பட உள்ளது. அதன்பின், சந்திரயான் - 3 விண்கலம், நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்யும். அதே நேரத்தில், லேண்டர் சாதனத்தை, நிலவின் தென் துருவத்தில், 23ம் தேதி தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த லேண்டர் சாதனத்துக்குள், ரோவர் எனப்படும் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் வாகனம் இடம் பெற்றுஉள்ளது. லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய உடன், ரோவர் வாகனம், நிலவின் மேற்பகுதியில் சுற்றி வந்து ஆய்வு செய்யும். இதுவரை அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிட்டபடி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக, இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us