தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சூப்பர் 30 நிறுவனருக்கு உயரிய விருது

சூப்பர் 30 நிறுவனருக்கு உயரிய விருது

சூப்பர் 30 நிறுவனருக்கு உயரிய விருது


UPDATED : டிச 20, 2010 12:00 AM

ADDED : டிச 20, 2010 12:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 20, 2010 12:00 AM ADDED : டிச 20, 2010 12:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பீகார் மாநிலத்தில் ஏழை எளியவருக்கு ஐ.ஐ.டி.,க்களில் படிக்கும் கனவை விதைத்து நனவாக்கும் சூப்பர் 30 பயிற்சி நிறுவனம் பற்றி கடந்த சில ஆண்டுகளாக செய்திகள் வெளிவருவதை அறிவோம். பிரிட்டன் போன்ற நாடுகளில் உள்ள ஆக்ஸ்போர்ட் போன்ற பிரபல
பல்கலைக்கழகங்கள் அவரை அழைத்து சிறப்பித்து வருகின்றன.


ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் கடந்த சில நாட்களுக்கு முன்பு பீகாரில் அந்த நிறுவனத்திற்கு நேரடியாகச் சென்று அதன் செயல்பாடு பற்றிக் கேட்டறிந்த பின் அதைப் புகழ்ந்திருக்கிறார். இதை நடத்தி வரும் அதன் நிறுவனர் ஆனந்த குமாருக்கு அந்த மாநில அரசு தற்போது அதன் உயரிய கல்வி விருதான மவுலானா அபுல் கலாம் ஆசாத் சீக்ஷா விருதை அறிவித்துள்ளது.


தனது சொந்த மாநிலம் தனது சேவையை கடைசியாக அங்கீகரித்திருப்பதில் மகிழ்ச்சியடைவதாக ஆனந்த குமார் கூறியுள்ளார். சமூகத்தில் சமூகப் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளவர்களுக்கு 9 மாத சிறப்புப் பயிற்சியையும் தங்குமிடம் மற்றும் உணவு ஆகியவற்றையும் இலவசமாகத் தந்து அவர்களை ஐ.ஐ.டி., ஜே.இ.இ., தேர்வுகளில் வெற்றி பெறச் செய்யும் ஆனந்த குமார் போன்றவர்கள் நமது மாநிலத்திலும் ஒன்றிரண்டு இடங்களில் செயல்பட்டு வருகின்றனர்.


2003ம் ஆண்டிலிருந்து இதுவரை இங்கு பயிற்சி பெற்றுள்ள 212 மாணவர்கள் ஐ.ஐ.டி.,க்களில் சேர்ந்துள்ளனர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணமில்லாத காரணத்தால் சேர முடியாமல் போன ஆனந்த குமார் தனது நிலை ஏழைகளுக்கு வரக் கூடாது என்பதற்காக தொடங்கிய முயற்சி இன்று தழைத்து வளர்ந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us