UPDATED : மே 15, 2025 12:00 AM
ADDED : மே 15, 2025 12:37 PM

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர்., பிலிம் மற்றும் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட்டில் பல்வேறு இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
படிப்பு:
பேச்சுலர் ஆப் விசுவல் ஆர்ட்ஸ்
பாடப்பிரிவுகள்:
சினிமாடோகிராபி, டிஜிட்டல் இன்டர்மீடியட், ஆடியோகிராபி, டைரக்ஷன் மற்றும் ஸ்கீரின்பிளே ரைட்டிங், பிலிம் எடிட்டிங், அனிமேஷன் அண்டு விசுவல் எபக்ட்ஸ்.
படிப்பு காலம்:
4 ஆண்டுகள்
தகுதிகள்:
சினிமாடோகிராபி மற்றும் டிஜிட்டல் இன்டர்மீடியட் படிப்புகளில் சேர்க்கை பெற, இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்துடன் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். போட்டோகிராபி பாடத்துடன் தொழில்கல்வி படித்தவர்கள் அல்லது டிப்ளமா படிப்பாக எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் / எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
ஆடியோகிராபி படிப்பில் சேர, இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்துடன் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ரேடியோ மற்றும் டிவி பாடத்துடன் தொழில்கல்வி படித்தவர்கள் அல்லது டிப்ளமா படிப்பாக எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் அல்லது எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
இதர படிப்புகளுக்கு, ஏதேனும் ஒரு பிரிவில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
மே 28, 2025
விபரங்களுக்கு:
www.filminstitute.tn.gov.in