தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழ்நாட்டில் 4 தனியார் வேளாண் கல்லூரிகளுக்கு அரசு அனுமதி!

தமிழ்நாட்டில் 4 தனியார் வேளாண் கல்லூரிகளுக்கு அரசு அனுமதி!

தமிழ்நாட்டில் 4 தனியார் வேளாண் கல்லூரிகளுக்கு அரசு அனுமதி!


UPDATED : நவ 28, 2009 12:00 AM

ADDED : நவ 28, 2009 04:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2009 12:00 AM ADDED : நவ 28, 2009 04:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் வலை குடில் மற்றும் தொழிலாளர் ஓய்வு அறை ஆகியவற்றை திறந்து வைத்து, பின்னர் வேளாண் ஆராய்ச்சி பயிர் திடல்களை பார்வையிட்ட கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக துணைவேந்தர் முருகேசபூபதி கரிசல் நில பண்ணை வளாகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:


தமிழகத்தில் வேளாண்மை ஆராய்ச்சி மூலம் விவசாயத்தை பெரு க்க பாண்டிச்சேரி, வேலூர் மாவட்டத்தில் கலவை, பொள்ளாச்சி மற்றும் பெரம்பலூர் ஆகிய இடங்களில் தனியார் வேளாண் கல்லூரிகளுக்கு அரசு அனுமதி வழங்கப்பட்டு நடந்து வருகிறது. மேலும் இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே தானியங்கி வானிலை மையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட உள்ளது.
 
தமிழ்நாட்டில் உள்ள 385 ஒன்றியங்களில் 224 இடங்களில் தானியங்கி வானிலை மையங்கள் அமைக்கப்பட்டும் 161 பிளாக்குகளில் அடுத்த ஆண்டு அமைக்கப்பட்டும் செயல்படும். இதன் மூலம் வானிலை சார்ந்த பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் பெ றும் பயனடைவர். தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் பயிர் மருந்தகம் மற்றும் சிறு மண் ஆய்வுக்கூடம் செயல்படுத்தப்பட்டுள்து.
 
இதற்கு முன்னாள் தமிழகத்தில் உள்ள 35 மண் பரிசோதனை மையங்களினால் ஒரு வருடத்திற்கு 8 லட்சம் மண் மாதிரி பரிசோதனை செய்ய முடியும். ஆனால் தற்போதுள்ள சிறு மண் ஆய்வுக்கூடங்களினால் வருடத்திற்கு 80 லட்சம் மண் மாதிரி பரிசோதனை செய்து சாதனை செய்ய முடியும்.
இந்த ஆய்வு மையத்தின் மூலம் 3 வருடத்தில் பிளாக்குகள் அனைத்திலும் பரிசோதனை செய்து மண்வள அட்டை வழங்கிடலாம்.
 
இந்த சிறு மண் ஆய்வு கூடங்களை நடத்த பிஎஸ்சி படித்த பட்டதாரிகளுக்கு அரசு மானியத்தில் கடன் வழங்குகின்றது. கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் சாதனைகளாக இதுவரை 55 ரகங்களை வெளியிட்டுள்ளது. இவ்வாறு துணைவேந்தர் முருகேசபூபதி  பேட்டி அளித்தார். வேளாண் ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர் பரமாத்மா, பேராசிரியர் சுப்பிரமணியன், முப்பிடாதி, சங்கரபாண்டியன், ராமமூர்த்தி மற்றும் ராஜாராம் ஆகியோர் பேட்டியின் போது உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us