தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குரூப் 4 தேர்வு; கவுன்சிலிங் அறிவிப்பு

குரூப் 4 தேர்வு; கவுன்சிலிங் அறிவிப்பு

குரூப் 4 தேர்வு; கவுன்சிலிங் அறிவிப்பு


UPDATED : அக் 30, 2015 12:00 AM

ADDED : அக் 30, 2015 11:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2015 12:00 AM ADDED : அக் 30, 2015 11:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை
:
 குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தருக்கான, கவுன்சிலிங் தேதி அறிவிக்கப் பட்டுள்ளது. 

தமிழக அரசு துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் உட்பட, 4,693 காலியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, 2014 டிச., 21ல் நடந்தது; 10.61 லட்சம் பேர் தேர்வெழுதினர். இதில், தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல், மே மாதம் வெளியானது; ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. 

இதையடுத்து, தகுதி பெற்றவர்களின் தேர்வெண் பட்டியலை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. அவர்களில், இளநிலை உதவியாளர் பணிக்கு, நவ., 16; தட்டச்சருக்கு டிச., 4; சுருக்கெழுத்து நிலை -3 பதவிக்கு, டிச., 14ல் கவுன்சிலிங் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. 

கூடுதல் விவரங்களை, http://www.tnpsc.gov.in/results.html இணையதள இணைப்பில் அறிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us