2553 அரசு மருத்துவர் பணியிடத்திற்கு 40 ஆயிரம் பேர் விண்ணப்பம் அமைச்சர் தகவல்
2553 அரசு மருத்துவர் பணியிடத்திற்கு 40 ஆயிரம் பேர் விண்ணப்பம் அமைச்சர் தகவல்
UPDATED : ஆக 06, 2024 12:00 AM
ADDED : ஆக 06, 2024 09:47 AM

காரைக்குடி:
தமிழகத்தில் காலியாக உள்ள 2553 அரசு மருத்துவர் பணியிடங்களுக்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். விரைவில், மருத்துவர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
காரைக்குடியில் நடந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டட திறப்பு விழாவில் பங்கேற்ற பின் அவர் கூறியதாவது:
சிவகங்கையில் ரூ. 11 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில் சீமான் சென்டர் கட்டும் பணி நடந்து வருகிறது. திருப்புத்துார் அரசு மருத்துவமனையில் ரூ. 4 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் தாய் சேய் நலப்பிரிவு கட்டடமும், உபகரணங்கள் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 70 மருத்துவர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
தவிர தமிழகத்தில் 2553 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. அரசு மருத்துவமனைகளில் குழந்தை பிறப்பு விகிதம் 59 சதவீதமாக உள்ளது. தமிழ்நாட்டில் 99.9சதவீதம் மருத்துவமனைகளில் மட்டுமே குழந்தைகள் பிறக்கும் நிலை இருந்து வருகிறது. மகப்பேறு மரண விகிதம் கடந்த ஆண்டு 54 சதவிகிதம் இருந்தது. இந்த ஆண்டு 45.5 சதவீதமாக குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில், அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் பிறக்கும் விகிதம் 59 சதவீதமாக உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 75 சதவீதம் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் பிறக்கின்றன. முதல்வர் ஸ்டாலின் வயநாட்டிற்கு ரூ.5 கோடி நிதி அறிவித்துள்ளதோடு, 10 மருத்துவர்கள் அடங்கிய குழுவினை அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் உள்ள 2553 அரசு மருத்துவர் காலிப் பணியிடங்களுக்கு 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். விரைவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.
இவ்வாறு கூறினார்.