தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இந்தியாவில் 80% கணித ஆசிரியர்களுக்கு அடிப்படையே தெரியாதாம்: அதிர்ச்சி அளிக்குது ஆய்வு

இந்தியாவில் 80% கணித ஆசிரியர்களுக்கு அடிப்படையே தெரியாதாம்: அதிர்ச்சி அளிக்குது ஆய்வு

இந்தியாவில் 80% கணித ஆசிரியர்களுக்கு அடிப்படையே தெரியாதாம்: அதிர்ச்சி அளிக்குது ஆய்வு


UPDATED : ஜூலை 01, 2024 12:00 AM

ADDED : ஜூலை 01, 2024 08:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 01, 2024 12:00 AM ADDED : ஜூலை 01, 2024 08:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:
இந்தியாவில் 80 சதவீத கணித ஆசிரியர்கள் அடிப்படை கேள்விகளுக்கு கூட பதில் தெரியாமல் தடுமாறுகின்றனர் என ஆய்வில் ஒன்றில் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் 152க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 1300க்கும் மேற்பட்ட கணித ஆசிரியர்களிடம் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


இந்தியாவில் உள்ள கணித ஆசிரியர்களில் 80 சதவீதம் பேருக்கு இயற்கணிதம் உள்ள பாடங்களில் அடிப்படை கேள்விகளுக்கு கூட பதில் தெரியவில்லை. நான்காம் வகுப்பு தரத்திலான கணிதப் பாட கேள்விகளுக்கு 73.3 சதவீத ஆசிரியா்கள் சரியாக பதிலளித்தனர். ஆனால் 7ம் வகுப்பு தரத்திலான கேள்விகளுக்கு 36.7 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே சரியாக விடையளித்தனர்.

வடிவியல் பாடம் சார்ந்த அடிப்படை கேள்விகளுக்கு 32.9 சதவீத ஆசிரியர்கள் தவறான புரிதலோடு பதில் அளித்தனர். தசம எண்களை முழு எண்களாக எடுத்து மதிப்பீடு செய்வது போன்ற தவறுகளை செய்தனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us