சாதனை மாணவரா நீங்கள்?: யுவஸ்ரீ கலா பாரதி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சாதனை மாணவரா நீங்கள்?: யுவஸ்ரீ கலா பாரதி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
UPDATED : ஜூலை 01, 2024 12:00 AM
ADDED : ஜூலை 01, 2024 08:30 AM

மதுரை:
கல்வி மற்றும் பிற துறைகளில் சாதனை படைத்த மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் யுவஸ்ரீ கலாபாரதி மற்றும் சுவாமி விவேகானந்தர் விருதுக்கு மாணவ மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மதுரை பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
மதுரை பாரதி யுவகேந்திரா அமைப்பு இசை, படிப்பு, ஓவியம், பரதநாட்டியம் யோகா, அபாகஸ் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் மற்றும் உட்பட பிற துறைகளில் சிறந்து விளங்குகிற எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு யுவஸ்ரீ கலா பாரதி என்ற விருதினையும் கல்லூரி மாணவ மாணவியருக்கு சுவாமி விவேகானந்தர் விருதினையும் ஒவ்வொரு மாவட்டத்திலும் வழங்கி வருகிறது.
ஒவ்வொருவருக்கும் மகாகவி பாரதியார் மற்றும் சுவாமி விவேகானந்தர் உருவம் பொறிக்கப்பட்ட கேடயம் மற்றும் விருதுக்கான பெரிய அளவிலான பட்டயமும், ஸ்படிக மாலையும் வழங்கப்படும். அந்தந்த துறைகளில் தகுதி உடைய பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள் தாங்கள் பெற்ற பரிசுக்கான ஜெராக்ஸ் பிரதிகளுடன் தங்கள் வீட்டு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் 15 நாட்களுக்குள் நெல்லை பாலு நிறுவனர் பாரதி யுவகேந்திரா ஜு102, சாந்தி சதன் குடியிருப்பு கோச்சடை மதுரை 625 016, செல்:9442630815 என்ற முகவரிக்கு ரூபாய் 10 அஞ்சல் தலை ஒட்டப்பட்ட சுய விலாசம் இட்ட கவருடன் விவரங்களை அனுப்ப வேண்டும்.
கடந்த மூன்று ஆண்டுகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 80% மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்கள் அவர்களின் மதிப்பெண் பட்டியலின் ஜெராக்ஸ் பிரதியுடனும் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள பள்ளி கல்லூரி மாணவ, மாணவியருக்கு யுவஸ்ரீ கலா பாரதி மற்றும் சுவாமி விவேகானந்தர் விருது வழங்கும் இந்நிகழ்ச்சி அந்தந்த மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
கோவை ஆர்ஷ வித்யாபீடம் சுவாமி ததேவானந்த சரஸ்வதி மற்றும் சுவாமி சுப்பிரமணிய சுவாமிகள் ஆகியோர் வழங்குகிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் 200 பேருக்கு யுவஸ்ரீ கலா பாரதி மற்றும் சுவாமி விவேகானந்தர் விருது வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரம் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் நாள் ஆகியன தேர்வு செய்யப்பட்டவர்களின் வீட்டு முகவரிக்கு தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.