UPDATED : ஜூலை 04, 2024 12:00 AM
ADDED : ஜூலை 04, 2024 03:35 PM
சென்னை:
தமிழகத்துக்கு தனியாக மாநில கல்வி கொள்கை தயாரிக்க, டில்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் சமீபத்தில் அறிக்கை சமர்ப்பித்தது.
அதில், அரசின் கல்வி நிறுவனங்களுக்கு போதிய நிதி ஒதுக்க முடியாததால், தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகம் வளர்ந்துள்ளன. எனவே, போதுமான நிதி ஒதுக்கி, உரிய வசதிகளுடன் கூடிய, தேவையான கல்வி நிறுவனங்களை அரசு துவங்க வேண்டும்.
சுயநிதி கல்வி நிறுவனங்களில் நன்கொடை வசூலிப்பதை அரசு தடுக்க வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களும், பயிற்சி நிறுவனங்களும், கல்வியின் புனிதத்தன்மையை மதிக்காமல், வியாபாரப் பொருளாக விளம்பரம் செய்கின்றன; இவற்றை கட்டுப்படுத்த வேண்டும். தனியார் பயிற்சி மையங்களை, அரசின் ஒழுங்கு முறை அமைப்பின் கீழ் கொண்டு வர வேண்டும்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை, தங்கள் சிறப்பு பயிற்சி மையத்தில் படிக்க கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆங்கில வழி கல்விக்கு வரும் மாணவர்களிடம், அதிக கட்டணம் வசூலிக்காமல் அரசு கண்காணிக்க வேண்டும்.
சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட அனைத்து பாடத்திட்ட பள்ளிகளுக்கும், தமிழக அரசு கட்டண வரைமுறை மேற்கொள்வது கட்டாயம்.
அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளும், அரசு பள்ளிகள் போல கருதப்பட வேண்டும். இந்த பள்ளிகளில் உபரியாக ஆசிரியர்கள் நியமித்தல், ஒழுங்குமுறை இன்றி கட்டணம் வசூலித்தல், போலியாக மாணவர்கள் எண்ணிக்கை காட்டுதல் போன்ற பிரச்னைகள் உள்ளதால், விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என்பது உட்பட பல பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.பயிற்சி மையங்களுக்கு கடிவாளம் கட்டண வரன்முறை அவசியம்
அரசின் கல்வி நிறுவனங்களுக்கு போதிய நிதி ஒதுக்க முடியாததால், தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகம் வளர்ந்துள்ளன. எனவே, போதுமான நிதி ஒதுக்கி, உரிய வசதிகளுடன் கூடிய, தேவையான கல்வி நிறுவனங்களை அரசு துவங்க வேண்டும். சுயநிதி கல்வி நிறுவனங்களில் நன்கொடை வசூலிப்பதை அரசு தடுக்க வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களும், பயிற்சி நிறுவனங்களும், கல்வியின் புனிதத்தன்மையை மதிக்காமல், வியாபாரப் பொருளாக விளம்பரம் செய்கின்றன; இவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.
தனியார் பயிற்சி மையங்களை, அரசின் ஒழுங்கு முறை அமைப்பின் கீழ் கொண்டு வர வேண்டும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை, தங்கள் சிறப்பு பயிற்சி மையத்தில் படிக்க கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆங்கில வழி கல்விக்கு வரும் மாணவர்களிடம், அதிக கட்டணம் வசூலிக்காமல் அரசு கண்காணிக்க வேண்டும். சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட அனைத்து பாடத்திட்ட பள்ளிகளுக்கும், தமிழக அரசு கட்டண வரைமுறை மேற்கொள்வது கட்டாயம்.அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளும், அரசு பள்ளிகள் போல கருதப்பட வேண்டும். இந்த பள்ளிகளில் உபரியாக ஆசிரியர்கள் நியமித்தல், ஒழுங்குமுறை இன்றி கட்டணம் வசூலித்தல், போலியாக மாணவர்கள் எண்ணிக்கை காட்டுதல் போன்ற பிரச்னைகள் உள்ளதால், விரிவான ஆய்வு நடத்த வேண்டும்.
அரசு செலவு தேவையா?
இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க, அரசு செலவிடும் நிதியை, அரசு பள்ளிகளின் முன்னேற்றத்துக்கு செலவிடுவது சிறப்பாக இருக்கும். மலைப்பகுதிகள் போன்ற மிகவும் பின்தங்கிய பகுதிகளில், அரசு பள்ளிகள் இல்லாத நிலையில், அங்குள்ள மாணவர்கள், இந்த திட்டத்தில், சுயநிதி சிறுபான்மையற்ற பள்ளிகளில் சேர, நிதியை பயன்படுத்தலாம். அரசின் இலவச நலத்திட்ட உதவிகளை தேவையான நேரத்தில் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இந்த சலுகையை பிளஸ் 2 வரை செயல்படுத்த வேண்டும். இலவச சைக்கிள் திட்டத்தை, ஒன்பதாம் வகுப்பு முதல் அமல்படுத்த வேண்டும். அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும், பிளஸ் 2 வரை வழங்க வேண்டும்.
கல்வி கொள்கையின் முக்கிய அம்சங்கள்
1. கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வர வேண்டும். தொடக்க கல்வி முதல், பல்கலை வரை தமிழ் வழிக்கல்வி ஏற்படுத்த வேண்டும். தமிழ் பல்கலையை சர்வதேச அளவில் தரம் உயர்த்த வேண்டும்2. அங்கன்வாடி மையங்கள், தாய் சேய் நல கவனிப்பு மையங்கள் எனவும், நர்சரி மற்றும் பிளே ஸ்கூல்கள், குழந்தைகள் மேம்பாட்டு மையங்கள் எனவும் பெயர் மாற்றப்பட வேண்டும். இந்த மையங்கள், சமூக நலத்துறை அமைச்சகத்தின் கீழ் வர வேண்டும் 3. பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் இருந்து மட்டுமே மாணவர்களை சேர்க்க வேண்டும்; பாடத்திட்டத்தை தொழில்நுட்ப ரீதியாக கற்கும் வகையில் மாற்ற வேண்டும் 4. மதிப்பெண் அடிப்படையில், ஒருவரை மற்றொருவருடன் ஒப்பிடுவது, தர வரிசை நிர்ணயிப்பது கூடாது. மாறாக மாணவர்களின் சிறப்பான முன்னேற்றத்தை பாராட்டுவதாக இருக்க வேண்டும். புதிய முயற்சி மேற்கொள்ளும் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்5. பாடங்களில் இருந்து மாணவர்கள் புரிந்தது என்ன; கற்பித்தலில் மாணவர்கள் தெரிந்து கொண்டது என்ன என்ற அடிப்படையில் தேர்வுகள் இருக்க வேண்டும். தொடக்கப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். 6. பொதுத் தேர்வுகளில் மாற்றம் வேண்டும். மனப்பாடக் கல்வி முறை தேர்வாக இல்லாமல், பாடங்களை புரிந்து, படித்து விடை எழுதியுள்ளனரா என, சோதிப்பதாக இருக்க வேண்டும். 7. 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு முந்தைய ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளி அளவிலான தேர்வு போதும்; மாநில அளவிலான தேர்வு கூடாது8. நகர்ப்புற ஏழை குடும்பங்களின் மாணவர்களுக்கு கல்லுாரிகள் வரை, உரிய கல்வி கிடைக்கச் செய்ய வேண்டும். சிறைவாசிகளின் பிள்ளைகள், ஆதரவற்ற பிள்ளைகளின் கல்விக்கு, நகர்ப்புற உள்ளாட்சி துறை உரிய வசதி ஏற்படுத்த வேண்டும்9. பெற்றோர், சமூகம், உறவுகளை இழந்த பிள்ளைகளை கைவிடாமல், அவர்களுக்கு உயர் கல்வியில், 1 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.10. ஆசிரியர்களை நியமிக்க தகுதி பெறும், டெட் தேர்வு என்பது வெறும் புத்தக கருத்துகள் அடிப்படையில் இருக்கக்கூடாது. ஆசிரியர்கள் கல்வி, கலை, அறிவியல், சமூக, ஜனநாயக கொள்கைகளை அறிந்தவர்களாக இருக்கின்றனரா; கலாசாரம், உள்ளூர் மொழி, பாலின சமத்துவம், மத, இன பாகுபாடற்ற எண்ணங்கள் உள்ளவர்களாக இருக்கின்றனரா என்பதை அறிவதாக இருக்க வேண்டும்.