sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

காகித விலையை காரணம் காட்டி பாடப்புத்தகங்கள் விலையை உயர்த்தலாமா?

/

காகித விலையை காரணம் காட்டி பாடப்புத்தகங்கள் விலையை உயர்த்தலாமா?

காகித விலையை காரணம் காட்டி பாடப்புத்தகங்கள் விலையை உயர்த்தலாமா?

காகித விலையை காரணம் காட்டி பாடப்புத்தகங்கள் விலையை உயர்த்தலாமா?


UPDATED : ஆக 15, 2024 12:00 AM

ADDED : ஆக 15, 2024 08:59 PM

Google News

UPDATED : ஆக 15, 2024 12:00 AM ADDED : ஆக 15, 2024 08:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
பள்ளி பாடப்புத்தகங்கள் விலை உயர்வுக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதன் விபரம்:

பழனிசாமி: அரசு பாடத் திட்டத்தில் படிக்கும், தனியார் பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் விலையை, 40 சதவீதம் உயர்த்தி இருப்பது கண்டனத்துக்கு உரியது. இது தனியார் பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களையும் பாதிக்கும். தற்போது உயர்த்தப்பட்டுள்ள, பள்ளி பாடப்புத்தகங்கள் விலை உயர்வை, உடனடியாக அரசு திரும்பப் பெற வேண்டும்.

பன்னீர்செல்வம்: ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடப்புத்தகங்கள் விலையை, தி.மு.க., அரசு உயர்த்தி உள்ளது. காகித விலை, அச்சிடும் கட்டணம் உயர்வு என, காரணம் தெரிவித்தாலும், 48 கோடி ரூபாய் செலவழித்து, கார் பந்தயம் நடத்தும் அரசுக்கு இது ஒன்றும் பெரிய விஷயமல்ல. அனைவருக்கும் கல்வியை இலவசமாக தர முடியவில்லை என்றாலும், குறைந்தபட்சம் புத்தகங்களையாவது இலவசமாக தர அரசு முயற்சி செய்ய வேண்டும். அதுவும் முடியவில்லை என்றால், விலையையாவது ஏற்றாமல் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

நஷ்டத்தை ஈடுகட்டவே இந்த விலை உயர்வு!

பாடப்புத்தகங்களின் விலை உயர்வுக்கு லாப நோக்கம் காரணமல்ல என, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மகேஷ் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. தனியார் பள்ளிகளுக்கு விற்கப்படும் பாடநுால்கள் நியாயமான விலையில் விற்கப்படுகின்றன. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை காகிதம், மேல் அட்டை, அச்சுக்கூலி ஆகியவற்றின் உயர்வைக் கருத்தில் கொண்டு விலை உயர்வு அறிவிக்கப்படுகிறது.

கடந்த 2015ல், 370 சதவீதம், 2018ல் 466 சதவீதம் விலை உயர்த்தப்பட்டது. 2018ஐ ஒப்பிடும்போது, காகித விலை 63 சதவீதம், மேல் அட்டை விலை 33 சதவீதம், அச்சுக்கூலி 21 சதவீதம் தற்போது உயர்ந்துள்ளது. அதற்கான செலவை ஈடுகட்டும் வகையில், ஆறாண்டுகளுக்கு பின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில், சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகம், மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மாவட்ட நுாலகங்கள், அறிவுசார் மையங்களுக்கு தேவையான புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us