நீட் தேர்வு மறுபரிசீலனை: காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி
நீட் தேர்வு மறுபரிசீலனை: காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி
UPDATED : ஏப் 05, 2024 12:00 AM
ADDED : ஏப் 05, 2024 05:42 PM

புதுடில்லி:
காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 'நீட் தேர்வு மறுபரிசீலனை, நாடு முழுவதும் 12ம் வகுப்பு வரை இலவச பள்ளிக்கல்வி' உள்ளிட்ட ஏராளமான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா, ராகுல், ப.சிதம்பரம், கே.சி.வேணுகோபால் ஆகியோர் வெளியிட்டனர். இதற்கான நிகழ்ச்சியில் காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா, சச்சின் பைலட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேர்தல் அறிக்கையை வெளியிட்டு ப.சிதம்பரம் பேசுகையில், 'அனைத்து தரப்பினருக்கும் நீதி என்ற அடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ஜனநாயகம் பலவீனம் அடைந்துவிட்டது' என்றார்.
காங்கிரசின் முக்கிய வாக்குறுதிகள்:
* நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
* 50 சதவீத இட ஒதுக்கீடு என்ற உச்ச வரம்பை உயர்த்த அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டுவரப்படும்.
* மத்திய அரசு பணிகளில் 30 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.
* பொருளாதாரத்தில் பின்தங்கிய அனைத்து சாதியினருக்கும் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
* அரசு பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த பணிமுறை நீக்கப்படும்
* மத்திய அரசு பணிகளில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் ஓராண்டில் நிரப்பப்படும்
* அரசு பணிக்கான விண்ணப்ப கட்டணம் முழுவதும் ரத்து செய்யப்படும்.
* நீட் தேர்வு மறு பரிசீலனை செய்யப்படும்.
* நீட் தேர்வு நடத்தலாமா வேண்டாமா என மாநில அரசுகள் முடிவு செய்யலாம்.
* மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்து, புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும்
* நாடு முழுவதும் 1 முதல் 12ம் வகுப்பு வரை இலவச கல்வி.
* நாடு முழுவதும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் கட்டாயமாக்கப்படும்.
* 2025 முதல் மத்திய அரசு பணிகளில் மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.
* 8வது அட்டவணையில் புதிய பிராந்திய மொழிகள் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* 2024 மார்ச் மாதம் வரையில் பெறப்பட்ட கல்விக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
* கல்லூரி மாணவர்களுக்கான கல்விக்கடன் உச்சவரம்பு ரூ.7.5 லட்சமாக உயர்த்தப்படும்.
* 100 நாள் வேலை திட்டத்தில் ஒருநாள் ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும்.
* விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்படும்.
* மகாலட்சுமி திட்டத்தில் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
ஜிஎஸ்டி புதிய சட்டம்
ஜிஎஸ்டி கவுன்சில் மாற்றி அமைக்கப்படும்
* பா.ஜ., அரசின் ஜிஎஸ்டி சட்டம் ரத்து செய்யப்பட்டு ஜிஎஸ்டி 2.ஓ கொண்டு வரப்படும்.
* விவசாய இடபொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது.
* எம்.பி., எம்எல்ஏ., கட்சித் தாவினால் உடனடியாக பதவி இழக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்
* தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கும் வகையில் புதிய சட்டம்
* மருத்துவ பணியாளர்கள் மீதான தாக்குதலை தடுக்க புதிய சட்டம்
* மூத்த குடிமக்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதியுதவி நிரப்பப்படும்.
* ரயில்களில் ரத்து செய்யப்பட்ட முதியோர் கட்டணச் சலுகை மீண்டும் வழங்கப்படும்
* பாலின பாகுபாடு இல்லாமல் ஒரே வேலை ஒரே சம்பளம் திட்டம் அமல்
* தினக்கூலி ஊழியர்களின் சம்பளம் ரூ.400 ஆக உயர்த்தப்படும்
* விளையாட்டில் சிறந்து விளங்கும் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை
மாநில அந்தஸ்து
* புதுச்சேரி மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும்
* ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க நடவடிக்கை
* அங்கன்வாடிகளில் புதிதாக 14 லட்சம் பணியிடங்கள் உருவாக்கப்படும்
* மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் முறை அகற்றப்படும்
* மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்கும் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்
* ஒரே நாடு ஒரே தேர்தல் முறை நடைமுறைப்படுத்தப்படாது
*டில்லி அரசின் ஆலோசனை ஏற்று துணை நிலை ஆளுநர் செயல்படும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்.
சுங்கக்கட்டணம்
* நிலையான வருமான வரித்திட்டம் அமல்படுத்தப்படும்.
* நாடு முழுவதும் சுங்கக்கட்டணம் குறைக்கப்படும்
* அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு மட்டும் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும்
* நீதிபதிகள் நியமனத்திற்கு தேசய நீதித்துறை ஆணையம் அமைக்கப்படும்.கொலிஜியம் முறை நீக்கப்படும்
* மாநில அரசுகளுக்கான நிதிப்பகிர்வை வழங்க புதிய வழிமுறை கொண்டு வரப்படும்
* அக்னிபத் திட்டம் ரத்து செய்யப்படும்
* அண்டை நாடுகளால் மீனவர்கள் கொல்லப்படுவதை தடுக்க புதிய வழிமுறைகள் வகுக்கப்படும்
* மாநில அரசுகளுடன் ஆலோசித்து, பொதுப்பட்டியலில் உள்ளவை மாநில பட்டியலுக்கு மாற்றப்படும்
* நாடு முழுவதும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டம் அமல்படுத்தப்படும்