sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/1ம் வகுப்பு மாணவர் சேர்க்கை வயது வரம்பில் தளர்வு அறிவிப்பு

1ம் வகுப்பு மாணவர் சேர்க்கை வயது வரம்பில் தளர்வு அறிவிப்பு

1ம் வகுப்பு மாணவர் சேர்க்கை வயது வரம்பில் தளர்வு அறிவிப்பு


UPDATED : மார் 27, 2026 06:45 PM

ADDED : மார் 27, 2026 06:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 27, 2026 06:45 PM ADDED : மார் 27, 2026 06:49 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு:
கர்நாடகாவில் நடப்பு ஆண்டில், 1ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வயது வரம்பில் தளர்வு செய்யப்பட்டு உள்ளதாக, சட்டசபையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.

நம் நாட்டில், ஒன்றாம் வகுப்பில் மாணவ, மாணவியர் சேருவதற்கு, 6 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் என, மத்திய அரசு நிபந்தனை விதித்து உள்ளது. கர்நாடகாவிலும் இந்த விதிமுறை அமலில் உள்ளது. இதற்கு பெற்றோர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

மத்திய அரசு குறிப்பிடும் வயதை நிர்ணயித்தால், குழந்தைகளை ஒன்றாம் வகுப்பில் சேர்ப்பதில் சிக்கல் ஏற்படும். குழந்தைகளின் ஓராண்டு கல்வியும் தடைபடும். எனவே, வயது வரம்பை குறைக்க வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி வந்தனர்.

பெற்றோர் வருத்தம்


இது தொடர்பாக, கடந்த காலங்களில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பாவிடமும், பெற்றோர் பல முறை முறையிட்டனர். வயது வரம்பை தளர்வு செய்யவில்லை என்றால், ஆயிரக்கணக்கான குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும். ஓராண்டு பள்ளிக்கு செல்லாமல் குழந்தைகள் வீட்டிலே இருக்கும் சூழல் ஏற்படும் என்றும் பெற்றோர் தெரிவித்தனர்.

இப்பிரச்னை குறித்து, சட்டசபையில் பா.ஜ., எம்.எல்.ஏ., அரவிந்த் பெல்லாட் கேள்வி எழுப்பினார். அதற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா அளித்த பதில்:

இந்த ஆண்டு 1ம் வகுப்பில் மாணவர்கள் சேருவதற்கு, 6 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்ற விதியில் தளர்வு அளிக்கப்படுகிறது.

1ம் வகுப்பில் சேர, 5 வயது 10 மாதம் பூர்த்தியாகி இருந்தால் போதும் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கிலான குழந்தைகள் பயன் அடைவர்.

அடுத்த கூட்டத்தொடர்



அதே சமயம், எல்.கே.ஜி., யு.கே.ஜி.,யில் குழந்தைகளை சேர்ப்பதற்கான வயது வரம்பு தொடர்பாக, எந்த சட்டமும் நடைமுறையில் இல்லை. இது, 1ம் வகுப்பில் மாணவர் சேர்க்கைக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது.

இந்த சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில், எல்.கே.ஜி., யு.கே.ஜி.,யில் குழந்தைகளை சேர்ப்பதற்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்படும். இது தொடர்பான சட்டம் அடுத்த கூட்டத்தொடரில் அமல்படுத்தப்படும்.

இந்த சட்டம் அனைத்து பள்ளிகளிலும் கடைப்பிடிக்கப்படும். அப்போது, 1ம் வகுப்பு வயது வரம்பு சேர்க்கை குறித்த பிரச்னை எழாது. மேலும், கர்நாடக கல்வி சட்டத்தில் திருத்தம் செய்யப்படும்.

பள்ளி மாணவர் சேர்க்கை நடைமுறையில் பயன்படுத்தப்படும் மென்பொருளில் சில மாற்றங்கள் செய்யப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இது, பெற்றோர் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us