UPDATED : செப் 29, 2011 12:00 AM
ADDED : செப் 29, 2011 03:48 PM
அ நிறம் | அளவு
தேர்வு எழுதிய மாணவர்கள், தங்களது திறனை தெரிந்து கொண்டு, எந்த வகையில் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்து கொள்ள இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
துணை மாவட்ட ஆட்சியர்
, போலிஸ் டி.எஸ்.பி. கூட்டுறவு சங்கங்களின் தணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் ஆகிய பதவிகளில் 61 காலி இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜனவரி மாதம் முதன்மைத் தேர்வு நடைபெற்றது.இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜுன் மாதம் நேர்முகத் தேர்வு நடைபெற்றது
. பணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலும் வெளியானது.இந்த நிலையில்
, முக்கியத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், அவர்களது நிலையைத் தெரிந்து கொள்ள வசதியாக மதிப்பெண் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. (www.tnpsc.gov.in) இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்வு எழுதியவர்கள் அவர்களது பதிவு எண்ணை போட்டு பொது அறிவு 2 தாள்களின் மதிப்பெண்களையும் தெரிந்து கொள்ளலாம்.முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்று
, மெயின் தேர்வு வரை சென்றவர்கள் தங்கள் மதிப்பெண்ணை அறிந்து கொள்வதால் தேர்வுக்கு தயாராகும் நிலையையும், பொது அறிவில் எந்தெந்த பிரிவுகளில் பலவீனமாக இருக்கிறோம், எந்த பிரிவில் அதிகமாக படிக்க வேண்டும் என்பதை உணர்ந்து அடுத்த தேர்வை நல்ல முறையில் எதிர்கொள்ள மாணவர்களுக்கு வழிகாட்டவே மதிப்பெண் விவரத்தை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.இதேப்போல அனைத்து போட்டித் தேர்வுகளின் முடிவுகளையும் டி
.என்.பி.எஸ்.சி. வெளியிட வேண்டும் என்று தேர்வுகள் எழுதும் மாணவ, மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.