தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10ம் வகுப்பு சமூக அறிவியல் மிக எளிமை: பலர் சதமடிக்க வாய்ப்பு

10ம் வகுப்பு சமூக அறிவியல் மிக எளிமை: பலர் சதமடிக்க வாய்ப்பு

10ம் வகுப்பு சமூக அறிவியல் மிக எளிமை: பலர் சதமடிக்க வாய்ப்பு


UPDATED : ஏப் 13, 2013 12:00 AM

ADDED : ஏப் 13, 2013 05:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 13, 2013 12:00 AM ADDED : ஏப் 13, 2013 05:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* எஸ்.தீபிகா, செய்யது அம்மாள் மெட்ரிக் பள்ளி, ராமநாதபுரம்: காலாண்டு, அரையாண்டு தேர்வில் கேட்கப்பட்டிருந்த பெரும்பாலான வினாக்கள், இத்தேர்விலும் கேட்கப்பட்டிருந்தன. விடை அளிப்பதில் எளிதாக இருந்தது. சுமாராக படிக்கும் மாணவர்களும், 50 மதிப்பெண்களுக்கு மேல் பெறக்கூடும். நன்றாக படிக்கும் மாணவர்கள் "சென்டம்&' பெற, அதிக வாய்ப்பு உள்ளது.

* ஏ.சிக்கந்தர் மன்சூர், நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி, ராமநாதபுரம்:
மாணவர்கள் எளிதில் புரிந்து பதிலளிக்கும் வகையிலேயே, அனைத்து வினாக்களும் எளிமையாக கேட்கப்பட்டிருந்தன. பாட புத்தகத்தை முழுமையாக படித்திருந்தாலே போதும், 50 மதிப்பெண்கள் கண்டிப்பாக கிடைக்கும். குறிப்பாக, ஐந்து மதிப்பெண் வினாக்கள் அனைத்தும்  எளிதாக இருந்தன.

* எம்.வரலெட்சுமி, அரசு மேல்நிலைப்பள்ளி, திருப்புல்லாணி, ராமநாதபுரம்:
இத்தேர்வில் அனைத்து வினாக்களும் எளிமையாக கேட்கப்பட்டிருந்தன. சுமாராக படிக்கும் மாணவர்களும், அதிக மதிப்பெண் பெறக்கூடும். காலக்கோடு, மேப் உள்ளிட்டவையும் எளிமையாக இருந்தது. எதிர்பார்த்ததை விட, தேர்வு மிக மிக எளிதாக இருந்தது, என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us