sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10ம் வகுப்பு இரண்டாம் தேர்வுக்கு கல்வி கட்டணம் வசூலிக்க தடை

10ம் வகுப்பு இரண்டாம் தேர்வுக்கு கல்வி கட்டணம் வசூலிக்க தடை

10ம் வகுப்பு இரண்டாம் தேர்வுக்கு கல்வி கட்டணம் வசூலிக்க தடை


UPDATED : ஏப் 01, 2026 11:12 AM

ADDED : ஏப் 01, 2026 11:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 01, 2026 11:12 AM ADDED : ஏப் 01, 2026 11:15 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
'பத்தாம் வகுப்பு இரண்டாம் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களிடம், எந்த கல்விக் கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது' என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

இது குறித்து, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ.,யின் தேர்வு கட்டுப்பாட் டாளர் சன்யம் பரத்வாஜ், இணைப்பு பள்ளிகளின் முதல்வர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு:

புதிய கல்விக் கொள்கையின்படி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், மதிப்பெண்களை உயர்த்த, இரண்டாம் பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு விருப்பம் உள்ள மாணவர்களின் பெயர் பட்டியலை உடனே அனுப்ப வேண்டும்.

அடுத்ததாக, தேர்வு முடிவுகள் வெளியான பின், மாணவர்கள் எழுத விரும்பும், மூன்று தேர்வுகளின் விபரங்கள் மற்றும் தேர்வுக்கட்டணத்தை செலுத்த வேண்டும்.

அதில், ஏதேனும் ஒரு பாடத்தை, மாணவர் எழுத விரும்பாவிட்டால், ஏற்கனவே முதல் பொதுத்தேர்வில் கிடைத்த மதிப்பெண்ணே இறுதியாக எடுத்து கொள்ளப்படும்.

பல பள்ளிகள், இரண்டாம் பொதுத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்களிடம், மூன்று மாத தனிப்பயிற்சி கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வருகின்றன. இது, சி.பி.எஸ்.இ., விதிமுறைகளை மீறும் செயல். அவ்வாறு, கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us