தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10ம் வகுப்பு உடனடி தேர்வுகள் தேதி அறிவிப்பு

10ம் வகுப்பு உடனடி தேர்வுகள் தேதி அறிவிப்பு

10ம் வகுப்பு உடனடி தேர்வுகள் தேதி அறிவிப்பு


UPDATED : மே 27, 2011 12:00 AM

ADDED : மே 27, 2011 02:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 27, 2011 12:00 AM ADDED : மே 27, 2011 02:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இன்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு உடனடியாக நடத்தப்படும் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மூன்று அல்லது அதற்குக் குறைவான பாடங்களில் தோல்வி அடைந்த மாணவர்கள் உடனடியாக தேர்வெழுதி தேர்ச்சி பெற்று வரும் கல்வி ஆண்டிலேயே பதினொன்றாம் வகுப்பில் சேர்வதற்கு வசதியாக ஜுன் மாதத்திலேயே தேர்வுகளை தேர்வுத் துறை நடத்துகிறது.


இது குறித்து தேர்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஒன்று முதல், மூன்று பாடங்கள் வரை தோல்வியடைந்த மாணவர்களுக்கு, ஜூன், ஜூலையில் உடனடித் தேர்வு நடத்தப்படும். பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் அனைவரும், மாவட்ட கல்வி அலுவலகங்கள், முதன்மைக் கல்வி அலுவலகங்களில், வரும் 30ம் தேதி முதல், ஜூன் 3ம் தேதி வரை, விண்ணப்பங்களை பெறலாம்.


பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ ஒப்படைக்கலாம்.


உடனடித் தேர்வு அட்டவணை:
எஸ்.எஸ்.எல்.சி., - 30.6.11 முதல், 8.7.11 வரை
ஓ.எஸ்.எல்.சி., - 29.6.11 முதல், 8.7.11 வரை
மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள் - 29.6.11 முதல், 9.7.11 வரை.


உடனடித் தேர்வு கட்டணம்:
எஸ்.எஸ்.எல்.சி., - ஓ.எஸ்.எல்.சி., - 125 ரூபாய்,
மெட்ரிக் - ஒரு பாடத்திற்கு, 135, இரு பாடங்கள், 235, மூன்று பாடங்களுக்கு, 335 ரூபாய்.
ஆங்கிலோ இந்தியன் - ஒரு பாடத்திற்கு, 85, இரு பாடங்களுக்கு, 135, மூன்று பாடங்களுக்கு, 185 ரூபாய் இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us