10ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
10ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
UPDATED : மே 28, 2026 06:49 PM
ADDED : மே 28, 2026 06:50 PM
அ நிறம் | அளவு
உடுமலை:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்களுக்கான துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய 29,013 மாணவர்களில், 27,933 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெறாத மீதமுள்ள 1,080 மாணவர்களுக்கு வரும் ஜூலை 8 முதல் 15ம் தேதி வரை துணைத்தேர்வுகள் நடைபெற உள்ளன.
இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக, ஜூன் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்களை அணுகலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
