UPDATED : அக் 03, 2026 11:49 AM
ADDED : அக் 03, 2026 11:50 AM
ஆனைமலை:
ஆனைமலை அருகே, கோட்டூர் பள்ளி மாணவர்கள், 'பத்து நாட்கள் லீவு பத்தல' என கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தார்.
ஆனைமலை அருகே, கோட்டூரில் நெல் கொள்முதல் மையத்தை, கோவை கலெக்டர் பவன்குமார் துவக்கி வைத்தார். முன்னதாக கோட்டூர் பகுதி விவசாயிகள் சார்பில், மாவட்ட கலெக்டருக்கு நெல் கதிர் வழங்கப்பட்டது.
அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள், கலெக்டரை சந்தித்தனர். தங்களுக்கு விளையாட்டு உபகரணங்களம் வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு கலெக்டர், இரண்டு வாரத்தில் வழங்குவதாக தெரிவித்தார்.
அதன்பின், 'காலாண்டுக்கு பத்து நாட்கள் லீவு பத்தல' எனக்கூறியதை கேட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் சிரித்தனர். எல்லோருக்கு ஒரே மாதிரி தான் லீவு, விடுமுறை மகிழ்ச்சியாக கொண்டாடுங்க. ஸ்கூலுக்கு போகணும். நல்லா படிக்கணும்,' என கூறி சென்றார்.
