தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கொடிசியாவில் மூன்று நாள் 'பிரிண்ட்கான் ஏ.ஐ., 2026' கண்காட்சி

கொடிசியாவில் மூன்று நாள் 'பிரிண்ட்கான் ஏ.ஐ., 2026' கண்காட்சி

கொடிசியாவில் மூன்று நாள் 'பிரிண்ட்கான் ஏ.ஐ., 2026' கண்காட்சி


UPDATED : அக் 03, 2026 11:50 AM

ADDED : அக் 03, 2026 11:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 11:50 AM ADDED : அக் 03, 2026 11:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
கொடிசியா வர்த்தக தொழில் கண்காட்சி வளாகத்தில், பிரிண்ட்கான் ஏ.ஐ., 2026 கண்காட்சி நேற்று துவங்கியது. சிறப்பு விருந்தினராக கொடிசியா தலைவர் ரங்கசாமி பங்கேற்றார்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாஸ்டர் பிரிண்டர்ஸ் பெடரேஷன் தலைவர் செந்தில்குமார் பேசுகையில், “பிரிண்டிங் தொழில்நுட்பம், வேகமான வளர்ச்சியை பெற்றுள்ளது. போட்டோ பிரிண்ட் ஆக இருந்தாலும், சாதாரண அழைப்பிதழாக இருந்தாலும், அழகாக வடிவமைக்கவும் அச்சிடவும் புதிய நவீன தொழில்நுட்பங்கள் வந்து விட்டன.

தகவல் தொழில்நுட்பத்தில், சாட் ஜிபிடி, ஜெமினி போன்றவை மட்டுமின்றி, செயற்கை நுண்ணறிவு அச்சக அளவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் விரைவாக பணிகளை முடிக்க முடியும்” என்றார்.

துவக்க விழாவில், இந்திய பிரிண்டர்ஸ் சங்கத்தின் தலைவர் குர்ஜித் சிங் மால், தென்னிந்திய மாஸ்டர் பிரிண்டர்ஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவர் பிரகாஷ் பாபு, கோவை மாவட்ட பிரிண்டர்ஸ் சங்கத்தின் தலைவர் ஜனகராஜ், தமிழ்நாடு மாஸ்டர் பிரிண்டர்ஸ் பெடரேஷன் செயலாளர் துரைகுமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கண்காட்சியில், போட்டா பிரிண்டிங், புத்தகங்கள் பிரிண்ட் செய்தல், நோட்டீஸ் அச்சடித்தல், திருமண பத்திரிகைகள், டெட்ரா பேக்கிங் வடிவங்களை வெட்டுதல் உள்ளிட்ட பல்வேறு அச்சிடுதல் தொழில்நுட்பங்கள் நேரடி செயல் விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன.

கண்காட்சி நாளை நிறைவு பெறுகிறது. காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை கண்காட்சியை காணலாம்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us