UPDATED : டிச 20, 2024 12:00 AM
ADDED : டிச 20, 2024 08:24 AM
சென்னை:
தமிழகத்தில், 10 இடங்களில், அரசு தொழில் பயிற்சி நிலையங்களை, அமைச்சர் கணேசன் திறந்து வைத்தார்.
கடலுார் மாவட்டம் வேப்பூர், திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை, நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, திருப்பத்துார் மாவட்டம் நாட்றாம்பள்ளி, திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லுார், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், துாத்துக்குடி மாவட்டம் ஏரல் ஆகிய இடங்களில், 111 கோடி ரூபாயில், புதிதாக அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றை கமுதியில் நடந்த விழாவில், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன் துவக்கி வைத்தார். இவற்றில், பல்வேறு தொழில் பிரிவுகளில், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதனால் நடப்பாண்டு, 1,192 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு பயன் பெறுவர்.