தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/100 சதவீதம் தேர்ச்சிக்கு பள்ளிகளில் இலக்கு நிர்ணயம்: அரசு கொறடா

100 சதவீதம் தேர்ச்சிக்கு பள்ளிகளில் இலக்கு நிர்ணயம்: அரசு கொறடா

100 சதவீதம் தேர்ச்சிக்கு பள்ளிகளில் இலக்கு நிர்ணயம்: அரசு கொறடா


UPDATED : ஜூலை 05, 2014 12:00 AM

ADDED : ஜூலை 05, 2014 11:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 05, 2014 12:00 AM ADDED : ஜூலை 05, 2014 11:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சி: ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.ஸி., உள்ளிட்ட பொதுத்தேர்வுகளில் மாணவ, மாணவியர்களை 100 சதவீதம் தேர்ச்சி பெற வைக்க, பள்ளிகளில் இலக்கு நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும் என, தமிழக அரசு கொறடா மனோகரன் தெரிவித்தார்.

திருச்சி பாலக்கரை, சையது முர்தஷா மேல்நிலைப்பள்ளியில், தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 14 லட்ச ரூபாய் மதிப்பில், புதிதாக கட்டப்பட்ட வகுப்பறைகளை திறந்து வைத்த, அரசு கொறடா மனோகரன் பேசுகையில்,  "அதிகமான மாணவ, மாணவர்களை தேர்ச்சிபெற வைக்க, பள்ளியில் தலைமை ஆசிரியர்கள் முதல், ஆசிரியர்கள் வரை கடுமையாக உழைக்க வேண்டும்.

மேலும், ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வுகளில், 100 சதவீதம் மாணவர் களை தேர்ச்சி பெற வைக்க இலக்கு நிர்ணயம் செய்துகொள்ள வேண்டும். இந்த பள்ளி கடந்தாண்டு, 98 சதவீதம் தேர்ச்சி பெற்றது. வரும் கல்வியாண்டில், 100 சதவீதம் தேர்ச்சி பெற வைக்க வேண்டும். தமிழக முதல்வர் ஜெயலலிதா கல்வி துறைக்கு, 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார்.

லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. இதை மாணவ, மாணவியர்கள் பயன்படுத்தி கொண்டு, நன்கு படித்து தமிழகத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us