துணைவேந்தர் நியமனத்தை ரத்துசெய்த ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம்கோர்ட் தடை
துணைவேந்தர் நியமனத்தை ரத்துசெய்த ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம்கோர்ட் தடை
UPDATED : ஜூலை 05, 2014 12:00 AM
ADDED : ஜூலை 05, 2014 03:36 PM
மதுரை பல்கலைக்கழக துணைவேந்தராக, கல்யாணி மதிவாணன் நியமிக்கப்பட்டார். இவர், பல்கலைக்கழக மானியக்குழு யு.ஜி.சி., நிர்ணயித்துள்ள தகுதியை பெறாததால், அவரின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என, கல்யாணிக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொரடப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை, கடந்த, 26ல் துணைவேந்தர் கல்யாணியின் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனிடையே, கல்யாணிக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்கலையில் போராட்டங்கள் நடந்தன.
ஐகோர்ட் கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, கல்யாணி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், எஸ்.ஜே. முகோபாத்யாய மற்றும் ரஞ்சன் கோகோய்அடங்கிய பெஞ்ச், கல்யாணியின் நியமனத்தை ரத்து செய்த ஐகோர்ட்டின் உத்தரவுக்கு தடை விதித்தது.
